Category: பத்திரிகை செய்தி

தலித் மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்!

ஹரியானா மாநிலத்தில் தலித் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பாசிச பயங்கரவாதிகள் நம் நாட்டில் வாழும் தலித்துகள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு எதிரான வெறுப்பு உணர்வைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். இது போன்ற மிருகத்தனமான தாக்குதல்கள் நம் நாட்டிற்குப் பெரும் ஆபத்தையும்,…

டாக்டர் முஹம்மத் முர்ஸிக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்!

எகிப்து நாட்டு மக்களால், அந்நாட்டுச் சட்டப்படி ஜனநாயக முறையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மத் முர்ஸி அவர்களின் அரசை, அந்நாட்டின் இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் பத்தாஹ் அல்ஸீஸீ சட்ட விரோதமாகக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டார். பின்னர் அவர் மீது பல்வேறு வகையான பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. அந்த வழக்குகளில், டாக்டர் முஹம்மத் முர்ஸி…

20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை, தெலுங்கானாவில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை – ஜ.இ.ஹி கடும் கண்டனம்

நகரி – செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வாரங்கல் சிறையிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் ஐந்து முஸ்லிம் விசாரணைக் கைதிகளைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு ஈவிரக்கமின்றி படுகொலை சம்பவங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளது. கடந்த…

  பாகிஸ்தான் பள்ளிக்குழந்தைகள் படுகொலைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்திவரும் பள்ளியில் புகுந்து 132 மாணவர்கள் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்டவர்களைத் தீவிரவாதிகள் கொன்றழித்துள்ளனர். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தக்காட்டுமிராண்டித்தனமான  செயலுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹமத் கடும் கண்டனத்தையும் உயிரிழந்தவர்களுக்கான ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் குண்டுவைப்பது, ரயில்களில் குண்டுவைப்பது போன்ற மனிதவிரோதச் செயல்களால் அப்பாவிகளைக்…

கண்ணியக் கவசம் ஹிஜாப் – பத்திரிகை செய்தி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு மகளிர் அணி சார்பில் வருகிற நவம்பர் 8 முதல் 15 வரை மாநில அளவில் “ஹிஜாப் வாரம்” கடைபிடிக்கப்படுகிறது. கண்ணியக் கவசம் ஹிஜாப் கண்ணுக்கு இமை போல பெண்ணுக்கு ஹிஜாப்.  இமைகளை இறைவன் படைத்திருப்பது கண்களைச் சிறைப்படுத்தவோ சிதைக்கவோ அல்ல; கண்களின் பாதுகாப்புக்குத்தான். அதுபோல பெண்களுக்கு ஹிஜாபை இறைவன் கடமையாக்கியது…

பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க ஐநா மற்றும் இந்தியாவிற்கு அமீரே ஜமாத் வேண்டுகோள்

  பாலஸ்தீன் மீது இஸ்ரேல் நடத்திவரும் படுகொலைகள், அநீதிகளுக்கு எதிராக ஐநாசபை மற்றும் இந்தியா கண்டன குரல் எழுப்ப வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைவர் மொளானா ஜலாலுத்தீன் உமரி அவர்களின் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஸா மீது இஸ்ரேல் தனது காட்டுமிரான்டித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. கடந்த சில தினங்களில் மட்டும்…

சென்னை சென்ட்ரல் ரயில்நிலைய குண்டுவெடிப்புக்கு ஜ.இ.ஹி தலைவர் கடும் கண்டனம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்மாநிலத் தலைவர் A.ஷப்பீர் அஹ்மது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: பெங்களூரிலிருந்து கவுஹாத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்த கவுஹாத்தி விரைவு ரயில் இன்று காலை 7:30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது S4,S5 பெட்டிகளில் குண்டு வெடித்து இளம் பெண் ஒருவர் பலியானதும் மற்றும் பலர் காயமான சம்பவம் கடும்…

முஸப்பர் நகர்: 200 வீடுகளைக் கட்டித் தர ஜமாஅத் முடிவு

முஸப்பர் நகர் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டார் பொதுச் செயலாளர்! 200 வீடுகளைக் கட்டித் தர முடிவு! ஜமாஅத்தின் சர்வே முடிவுகள் வெளியீடு! ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலீ தலைமையிலான குழுவினர், உ.பி.மாநிலம் முஸஃப்பர் நகர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான லோய், புதானா, ஷஹ்பூர், பாஸி கலன் ஆகிய இடங்களில் ஜமாஅத்தின் சார்பாக…

ஒருபால் உறவு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்!

பத்திரிகைச் செய்தி ஒருபால் உறவு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்! – ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல் ஒருபால் உறவு சட்ட விரோதமானது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு – புதுச்சேரி…

பங்களாதேஷ் ஜமாஅத் இஸ்லாமி தலைவர் மெள அப்துல் காதர் முல்லாஹ் படுகொலைக்கு ஜ.இ.ஹி தலைவர் கண்டனம்

பங்களா தேஷ் ஜமாஅத் இஸ்லாமி தலைவர் மெளலானா அப்துல் காதர் முல்லாஹ் வியாழன் அன்று இரவு, ‘1971ல் அந்நாட்டு பிரிவினையின் போது நடந்த அசம்பாவிதங்களுக்கு காரணம்!’ – என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆளும் அரசால் படுகொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய தலைவர் மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:…