Category: பத்திரிகை செய்தி

பாட்னா தொடர் வெடிகுண்டு வெடிப்பு ஜ.இ.ஹி. கடும் கண்டனம்

பாட்னாவில் நடைபெற்றுள்ள தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை ஜ.இ.ஹி வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் 5 நபர்களுக்கு ஆழ்ந்த துக்கத்தை தெரிவிப்பதோடு பீஹாரின் அமைதியான சூழலை சீர்குலைக்க காரணமானவர்களை முறையான விசாரணை நடத்தி இத்துயர சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ஜ.இ.ஹி-ன் பொதுச்செயலாளர் கூறுகையில், தேர்தல் இலாபத்திற்காக பாசிச சக்திகள்…

இக்வான்கள் மீது தடையா? ஜமாஅத் தலைவர் கடும் கண்டனம்

  எகிப்தில் நீதிமன்றத்தின் மூலமாக இக்வானுல் முஸ்லிமின் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி கடுமையாகக் கண்டித்துள்ளார். நீதியையும் நியாயத்தையும் ஜனநாயகத்தையும் குழி தோண்டிப் புதைக்கின்ற செயல் இது என்று ஜமாஅத் தலைவர் கண்டித்துள்ளார். ஜனநாயகத்தையும் நீதியையும் விரும்புகின்ற மக்கள் அனைவரும் எகிப்து இராணுவம் மேற்கொண்டிருக்கின்ற…

முஸ்லிம் தலைவர்கள் பிரதமரிடம் முறையீடு

17.09.2013 : அகில இந்திய அளவில் செயல்படும் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து முஸாஃபர் நகர் கலவரத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.  தொடர்ந்து முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் அநீதிகளையும், தவறான நடவடிக்கைகளையும் எடுத்து வைத்தனர். அரசியல் லாபத்திற்காகவும் இன்னும் பிற சுய இலாபங்களுக்காகவும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தவறான வதந்திகளை பரப்பி…

எகிப்தில் இராணுவ அத்து மீறல்: அமீரே ஜமாஅத் கடும் கண்டனம்

எகிப்தில் அமைதியான முறையில் போராடி வருகிற இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினர் மீது எகிப்து இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித்தனமான, கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா. சையத் ஜலாலுத்தீன் உமரி கடுமையாகக் கண்டித்துள்ளார். ராபிஆ பள்ளிவாசல் மைதானத்தில் அமைதியான முறையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆயுதம் எதுவும் ஏந்தி இராத, அப்பாவிகளான,…

பா.ஜ.க பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம்

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் 23.07.2013 அன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இக்கூட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் மாநில மக்கள் தொடர்பு செயலாளர் ஐ.ஜலாலுதீனும், வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் அவர்களும் கலந்து கொண்டனர். பத்திரிகை அறிக்கை: பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர்…

புத்த கயாவில் குண்டுவெடிப்பு: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்!

  பீகார் மாநிலம் புத்தகயாவில் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மகாபோதி கோயிலில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த். இது அரசு நிர்வாகத்தின் குறிப்பாக, புலனாய்வு அமைப்புகளின் தோல்வியைப் படம்பிடித்துக் காட்டுகிறது எனவும் அது தெரிவித்துள்ளது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலீ வெளியிட்டுள்ள…

காலித் முஜாஹித்தின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு – ஜ.இ.ஹி தலைவர் கோரிக்கை

உத்திரப் பிரதேச போலிசாரால் அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித் முஜாஹித்தின் குடும்பத்தினருக்கு ரூ ஒரு கோடி இழப்பீடு தரப்பட வேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியப் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலீ கோரிக்கை விடுத்துள்ளார். பைஜாபாத் நீதிமன்றத்திலிருந்து லக்னௌ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்ற வழியில் அப்பாவி முஸ்லிம் இளைஞர் காலித்…

ஐ.பி.எல் போட்டிகளில் கவர்ச்சிப் பெண்களின் நடனம்: ஜமாஅத் தலைவர் கடும் கண்டனம்

கொல்கத்தாவில் ஏப்ரல் தொடக்கத்தில் நடந்த ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளின் தொடக்க விழாவில் கவர்ச்சிப் பெண்களின் நடனமும் நிர்வாணப் பெண்களின் ஆட்டமும் நடந்திருப்பது குறித்து ஜமாஅத் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் கேளிக்கைக் கொண்டாட்டம் பெண்ணினத்துக்கே அவமானம் என்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியப் பொதுச்செயலாளர் மௌலானா நுஸ்ரத் அலீ கருத்துரைத்துள்ளார். விளையாட்டை விளையாட்டாகவே…

GIO மீதான குற்றசாட்டுக்கு மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்!

ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அமைப்பின் (GIO) மீது தீவிரவாத முத்திரை : மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்! ஜமாத்தே இஸ்லாமியின் “Girls Islamic Organisation”(GIO), புர்கா அணிய வலியுறுத்துதல், குரான் போதனைகளை பின்பற்றுதல், இஸ்லாத்தின்படி வாழ தூண்டுதல் உள்ளிட்ட “ஜிஹாதிய” பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும், அவர்களை “கழுகுக்கண்” கொண்டு கண்காணிக்க வேண்டும் என, மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வு…

பெண்களுடைய பாதுக்காப்பை உறுதி செய்ய மகளிர் மாநாட்டில் தீர்மானம்

 காதலை ஏற்க மறுத்ததால் ஆசிட் வீச்சுக்கு உள்ளான இளம்பெண் வினோதினி காலமானார். இந்நிகழ்வு பெண்கள் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கின்றனர் என்பதை உறுதி செய்கிறது. இது போன்ற நிகழ்வுகள் மிகவும் கண்டிக்கக்கூடியது. வினோதினியின் மரணம் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசி நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க…