Category: பத்திரிகை செய்தி

தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்

உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹிம்(அலை) அவர்களது தியாகத்தை நினைவுகூறும் வண்ணமாக கொண்டாடப்படும் பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தியை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில பொதுச்செயலாளர் மெளலவி ஹனிஃபா மன்பஈ அவர்கள் தெரிவித்து கொண்டார்.  மேலும் பொதுச்செயலாளர் அவர்கள் கூறுகையில், உலகில் அமைதியும், அன்பும் நிலவ, இறைவனின் அருளை பெற ஒருவருக்கொருவர் நேசத்துடனும், பாசத்துடனும் வாழ்ந்து…

புதுச்சேரியில் இவர்தான் முஹம்மத்(ஸல்) அறிமுக நிகழ்ச்சிகள்

புதுச்சேரி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பிறகு புதுச்சேரியிலுள்ள முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என ஆயிரகணக்கான மக்களை சந்தித்து இவர்தான் முஹம்மத்(ஸல்) அறிமுகம் செய்து வருகின்றனர். தெருமுனை பிரச்சாரங்கள், புத்தக அரங்குகள் போன்ற பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகளில் ஊழியர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர். பத்திரிகை செய்தி      

சென்னை, திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரியில் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலத்தின் சார்பில் “இவர் தான் முஹம்மத்” பரப்புரை இயக்கம் அக்டோபர் 5 முதல் 14 வரை நடைபெற்று வருகிறது. இச்செய்தியை அனைத்து சமுதாய மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் சென்னை, வேலூர், திருச்சி, புதுச்சேரி ஆகிய இடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு பகுதிகளிலும் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் 20க்கும்…

அதிகாலை ஆண்கள் -மெள.நூஹ் மஹ்ளரி – சிறப்பு கட்டுரை

அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ் அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையை நிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாக அதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் பெயர் சூட்டுகின்றது. ரமளான் அல்லாத நாட்களில் ஸுபுஹ்…

அண்ணல் நபிகளாரைக் குறித்து காணப்படுகின்ற அறியாமை அகல்வதற்கும் தவறான கருத்துக்கள் களையப்படுவதற்கும் உறுதி செய்யுமாறும் ஜமாஅத் தலைவர் வேண்டுகோள்

அகிலங்களுக்கெல்லாம் அருட்கொடையாய் வந்த இறைத்தூதரின் கண்ணியத்துக்கு ஊறு விளைவிக்கின்ற வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார். உலகம் முழுவதும் இருக்கின்ற முஸ்லிம்களின் உள்ளங்களைக் காயப்படுத்துகின்ற செயல் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாத்துக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியும் ஆட்சேபமும்…

இறைத்தூதரை இழிவுபடுத்தி தயாராகியுள்ள படத்தை இணையத்தில் முடக்கிவிடுமாறு ஜ.இ.ஹி. தமிழக தலைவர் கோரிக்கை

இறைத்தூதரைக் இழிவுபடுத்தி அமெரிக்காவில் எடுக்கப்பட்டிருக்கின்ற கேவலமான வெறுக்கத்தக்க, அருவருப்பான திரைப்படத்தை தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் ஏ. ஷப்பீர் அஹ்மத் கடுமையாகக் கண்டித்துள்ளார். ஏ. ஷப்பீர் அஹ்மத் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கை பின்வருமாறு: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம்களால் உயிரினும் மேலாய் மதிக்கப்படுகின்ற ஒப்பற்ற தலைவர்தாம் அண்ணல் நபிகளார்(ஸல்) என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.…

கத்தீல் படுகொலை: ஜமாஅத் பொதுச்செயலாளர் கடும் கண்டனம்

கத்தீல் குடும்பத்தினருக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். பயங்கரவாதச் செயல்கலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக பூனாவின் யர்வாதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த கத்தீல் சித்திகீ என்கிற முஸ்லிம் இளைஞர் ஈரவிக்கமின்றி கொலை செய்யப்பட்டதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொதுச்செயலாளர் மெளலானா நுஸ்ரத் அலீ கடுமையாக கண்டித்துள்ளார்.  கொல்லப்பட்ட கத்தீல் சித்திகீயின் குடும்பத்தினருக்கு ஐம்பது…

ஜமாஅத் செய்திச்சுடர் மார்ச் 2012

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – தமிழ்நாடு & புதுச்சேரியில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கின்ணைத்து  “ஜமாஅத் செய்திச்சுடர்” மார்ச் 2012 காலாண்டு இதழ் வெளிவந்து விட்டது. ஜமாஅத் செய்திச்சுடர் – மார்ச் 2012

மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து நாட்டை மிகப் பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவது மத்திய அரசின் பொறுப்பாகும்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் கருத்து  ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது நம் நாட்டில் இ.பி.கோ 377-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இந்நிலையில் 2009-இல் தில்லி உயர்நீதி மன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் பருவ வயதை எட்டிவிட்ட இரண்டு மனிதர்கள் மனம் ஒப்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்-டால் அது குற்றமாகாது என்று தில்லி உயர்நீதி…

விருது கிடைத்தாலும் விடிவு கிடைத்தபாடில்லை……….

2009 – 2010 ம் ஆண்டுக்கான பத்திரிக்கை துறையின் சாதனை விருதான “ராம்நாத் கோயங்காவிருது” பெற்ற மாதயமம் மலையாளம் தினசரியின் துணையாசிரியர் செல்வி ரெஜினா நல்லாலம் அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது. இதேபோல் “கேரள வனப் பாதுகாப்பு அலுவலர் ஒன்றியம்” சார்பிலும் அவருக்கு சிறந்த “சுற்றச்சூழல் ஊடகவியலாளர்” என்ற விருதினை வழங்கி கௌரவித் துள்ளது. ஜமா அத்தே…