Category: மற்ற நிகழ்வுகள்

சென்னையில் அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை மண்டலம் சார்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற டிசம்பர் 25-28 ஆகிய நாட்களில் அமைதியை நோக்கி – வாழ்வியல் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. இக்கண்காட்சிக்கான இலட்சினை (logo) வெளியீட்டு நிகழ்ச்சி 09.11.2014 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடைபெற்றது. வி.எஸ்.அமீன் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.  பிறகு மாநிலத்தலைவர்…

திருச்சியில் உளத்தூய்மை பயிற்சி முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) திருச்சி கிளையின் சார்பாக 09-11-2014 அன்று நூருல் ஹுதா பள்ளியில் ஊழியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் காலை 10 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. இம்முகாம் JIH- திருச்சி மாநகர தலைவர் ஜனாப். G. சையது முஹம்மது திருகுர்ஆன் விரிவுரையுடன் துவங்கியது. SIO முன்னாள் தலைவர் ஜனாப்.…

முஹர்ரம் தரும் படிப்பினைகள்- சிறப்பு சொற்பொழிவு

09-11-2014 அன்று மாலை 6.30 மணியளவில் நூருல் ஹுதா பள்ளியில் “முஹர்ரம் தரும் படிப்பினைகள்” என்ற தலைப்பில் SIO முன்னாள் தலைவர் ஜனாப். A. P. நாசர் (JIH-கேரளா) அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைப்பெற்றது. ‘முஹர்ரம்’ துக்கம் அனுசரிக்கும் மாதம் அல்ல. மாறாக முஸ்லிகள் படிப்பினை பெறக்கூடிய மாதம் என்பதனை திருக்குர்ஆன் வசனங்கள், ஹதீஸ் மற்றும்…

கோவையில் ஹிஜாப் அரங்கக் கூட்டம்

ஜமஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் “ஹிஜாப்” விழிப்புணர்வு பிரச்சார வாரம் (நவம்பர் 8 முதல் 16, 2014 வரை) நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) கோவை மாநகரக் கிளையின் மகளிர் பிரிவின் சார்பாக கரும்புக்கடையிலுள்ள ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரி வளாகத்தில் சகோதர…

லிபாஸ் தையல் பயிற்சி மையம் 11-வது ஆண்டு விழா

கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடந்த பத்து ஆண்டுகளாக பெண்களுக்கான லிபாஸ் தையல் பயிற்சி மையத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பாலிடெக்னிக் வாயிலாக சமூக முன்னேற்றதிர்க்கான திட்டத்தின் கீழ் இந்த மையத்தின் மூலம் பயின்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா…

கோவையில் ஹஜ் வழிகாட்டுதல் முகாம்

  கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக இந்த ஆண்டு புனித ஹஜ்ஜை நிறைவேற்றச்செல்லும் ஹாஜிகளுக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று (06 – 09 – 2014) சனிக்கிழமை,கோவை, கரும்புக்கடை, இலாஹி நகரில் உள்ள முனவ்வரா ஹாலில் காலை 9:30 மணி முதல் மாலை 5 மணிவரை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்நிகழ்ச்சியை இறை வசனங்களை ஓதி துவங்கி வைத்தார் கோவை, மஸ்ஜிதுல் ஹுதாவின்…

பத்திரிகையாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) சார்பில் 13.08.2014 அன்று மாலை ஊடகவியலாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஐ.எஃப்.டி வளாகத்தில் நடைபெற்றது. மெளலவி முஸம்மில் புகாரி அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன் பிறகு நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் தங்களது…

அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்…!

உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் ஒரு மாத காலம் உண்ணாமல், பருகாமல் நோன்பிருந்து தங்களின் ஆன்மிகக் கடமையை நிறைவேற்றி  இன்று மகிழ்ச்சியுடன் ஈகைத் திருநாளைக் கொண்டாடுகிறார்கள். இங்கு ஈகை எனும் சொல் நம் சிந்தனையைத் தூண்டுகிறது.  பண்டிகை நாளன்று சிறப்புத் தொழுகைக்குப்  போவதற்கு முன்பாக ஒவ்வொரு நோன்பாளியும்  ஃபித்ரா எனும் பெருநாள் தர்மத்தை ஏழைகளுக்கு வழங்கிவிட்டுத்தான் செல்ல…

அனைத்து சமய மக்கள் பங்கேற்க்கும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் அனைத்து சமய மக்கள் பங்கேற்க்கும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.  குறிப்பாக கோவை, ஷாஸ்தா கல்லூரி,  உடுமலை, திருப்பூர் மற்றும் சென்னையில் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமய நல்லிணக்கத்தை வழியுறுத்தும் நிகழ்வாக நோன்பு துறப்பு நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது.  பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், பாதரியார்கள்,…

இஸ்ரேலின் இனப்படுகொலை – கண்டன ஆர்ப்பாட்டங்கள்

  பயங்கரவாத இஸ்ரேல் அரசு காஸாவை வேட்டையாடி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்து வருகிறது. பெண்களும் குழந்தைகளும் கொத்துத் கொத்தாய்க் கொல்லப்படுகிறார்கள். அந்த அப்பாவி மக்களின் வீடுகளும் உடைமைகளும் பெருமளவில் நாசமாகியுள்ளன. இஸ்ரேல் மேற்கு கரை மீது வீசிய குண்டுகள் போரில் பயன்படுத்தப்படும் அதிபயங்கரக் குண்டுகள். அவை விழும்…