Category: அமைப்பு

கோவை மீன் மார்க்கெட்டில் நபிகள் நாயகத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை கிளையின் சார்பாக இன்று (21.10.2012) காலை ஸுபுஹ் தொழுகைக்குப் பிறகு கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் நபிகள் நாயகம் குறித்து விளக்கப்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாத சகோதர சமுதாயத்தை சேர்ந்த அன்பர்களுக்கு இலவச புத்தகங்களும், மடக்கோலைகளும் விநியோகிக்கப்பட்டது. பலர் பயனடைந்தனர்.  

முஹம்மத்(ஸல்) அவர்களை அறிமுகப்படுத்தும் கண்காட்சி – சென்னை தாசமக்கானில்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மத்திய சென்னை சார்பில் உலக மக்களுக்கு அருளாக வந்த இறுதிதூதர் முஹம்மத்(ஸல்) அழகிய வாழ்வினை அறிமுகப்படுத்தும் கண்காட்சி சென்னை தாசாமக்கான் ஹலாய்மேனன் ஹாலில் 23,24 அக்டோபர் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகின்றது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில பொதுச்செயலாளர் மெளலவி ஹனிஃபா மன்பஈ 23.10.2012…

முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் குறும்படம் “ஒரு துளிக் கடல்”

உலகத்தில் வாழும் உலக மக்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரி முஹம்மத்(ஸல்) வாழ்வினை அறிமுகப்படுத்தும் “ஒரு துளிக் கடல்” குறும்படம் Watch Documentary Film: [jwplayer mediaid=”4974″]   http://www.youtube.com/watch?v=kgdfMI7T_1s&feature=youtu.be

நன்மையை கொண்டு தீமையை தடுங்கள் – சென்னையில் குறும்படம் வெளியீடு

இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினை  அறிமுகப்படுத்தும் ஒரு துளிக்கடல் குறும்படத்தின் வெளியீடு 20.10.2012 அன்று மாலை  7 மணிக்கு கிரியேடிவ் கமியூனிகேஷன் சென்னை அரங்கில் நடைபெற்றது.  சகோதரர் அப்துல் காதர் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சி ஆரம்பமானது.  True Vision சார்பில் வெளியிடப்பட்டுள்ள குறும்படத்தின் நோக்கத்தையும், குறும்படம் சார்பான ஒரு சில தகவல்களை ஜலாலுதீன் பகிர்ந்து…

ஜமாஅத் செய்திச்சுடர் செப்டம்பர் 2012

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – தமிழ்நாடு & புதுச்சேரியில் நடைபெற்று வரும் பல்வேறு நிகழ்வுகளை ஒருங்கின்ணைத்து  “ஜமாஅத் செய்திச்சுடர்” செப்டம்பர் 2012 காலாண்டு இதழ் வெளிவந்து விட்டது. ஜமாஅத் செய்திச்சுடர் – செப்டம்பர் 2012  

வேலூர், குடந்தை, கோவை, திருப்பூர், சென்னையில் இவர்தான் முஹம்மத்(ஸல்)! அரங்குகள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ) சார்பில் கல்லூரிகள், பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் என பொது மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் இவர்தான் முஹம்மத்(ஸல்)! என்ற தலைப்பில் முஹம்மத் (ஸல்) அவர்களை அறிமுகம் செய்யும் பல்வேறு புத்தகங்கள், பதாகைகளுடன் ஊழியர்கள் அறிமுக நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். சென்னை, வேலூர், தஞ்சை,…

இவர்தான் முஹம்மத்(ஸல்) தஞ்சையில் சிறப்பு பொதுக்கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தஞ்சை வட்டத்தின் சார்பில் 17.10.2012 அன்று இவர்தான் முஹம்மத்(ஸல்) சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் சிறப்புரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பாஸ்கர், பேராசிரியர் விஜயராமலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினர். முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாற்றை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.…

இவர்தான் முஹம்மத்(ஸல்)! மதுரையில் சிறப்பு பொதுக்கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மதுரை கிளையின் சார்பில் 14.10.2012 அன்று இவர்தான் முஹம்மத்(ஸல்) பரப்புரை இயக்கத்தின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முஹம்மத்(ஸல்) அவர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இச்சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம் அல்லாத சகோதர சகோதரிகள் திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மெளலவி நூஹ் மஹ்ளரி சிறப்புரையாற்றினார். முஹம்மத்(ஸல்) முஸ்லிம்களுக்கு மட்டும்…

இவர்தான் முஹம்மத்! வாணியம்பாடியில் சிறப்பு பொதுக்கூட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வாணியம்பாடி கிளை சார்பில் இவர்தான் முஹம்மத்! பரப்புரை இயக்கத்தின் முக்கிய நிகழ்வாக சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு 16.10.2012 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சகோதர சமுதாயத்தை சார்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். சிறப்பு நிகழ்வில் வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய செயலாளர் திரு.சுப்பிரமணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்)…

சென்னை முகப்பேரில் முஹம்மத்(ஸல்) அறிமுக நிகழ்ச்சிகள்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கு சென்னை சார்பில் சென்னை அண்ணாடவர், திருமங்களம், பூங்கா போன்ற மக்கள் அதிகமாக வந்து போகும் இடங்களில் முஹம்மத்(ஸல்) அறிமுகம் செய்யும் புத்தகங்களுடன் அரங்குகள் அமைத்து இவர்தான் முஹம்மத்(ஸல்) அறிமுக மடக்கோலை, புத்தகங்களை ஊழியர்கள் வினியோகித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் ஆயிரகணக்கான பொதுமக்களுக்கு முஹம்மத் (ஸல்) அறிமுகத்தை ஊழியர்கள் செய்து…