Category: முக்கிய நிகழ்வுகள்

டாக்டர் முஹம்மத் முர்ஸிக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனம்!

எகிப்து நாட்டு மக்களால், அந்நாட்டுச் சட்டப்படி ஜனநாயக முறையில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முஹம்மத் முர்ஸி அவர்களின் அரசை, அந்நாட்டின் இராணுவத் தலைமைத் தளபதி அப்துல் பத்தாஹ் அல்ஸீஸீ சட்ட விரோதமாகக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைப் பறித்துக் கொண்டார். பின்னர் அவர் மீது பல்வேறு வகையான பொய் வழக்குகள் சுமத்தப்பட்டன. அந்த வழக்குகளில், டாக்டர் முஹம்மத் முர்ஸி…

ஏ.ஷப்பீர் அஹ்மத் மாநிலத்தலைவராக நியமனம்

ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் 2015-19ம் ஆண்டிற்கான தமிழ்நாடு & புதுச்சேரியின் மாநிலத்தலைவராக ஜ.இ.ஹி-ன் அகில இந்திய தலைவர் மெள.ஜலாலுதீன் உமரி அவர்களால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோயம்புத்தூரை சார்ந்த ஏ.ஷப்பீர் அஹமத் அவர்கள் கடந்த 8 ஆண்டுகள் மாநிலத் தலைவராக திறம்பட பணியாற்றியுள்ளார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ்…

ஜ.இ.ஹி-ன் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எஞ்சினியர் முஹம்மத் சலீம் சாகிப் நியமனம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எஞ்சினியர் முஹம்மத் சலீம் சாகிப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக தில்லியில் நடந்த மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் எஞ்சினியர் முஹம்மத் சலீம் அவர்களை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். கேரள மாநிலத்…

20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொலை, தெலுங்கானாவில் முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை – ஜ.இ.ஹி கடும் கண்டனம்

நகரி – செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கூறி 20 தமிழக தொழிலாளர்கள் ஆந்திராவில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வாரங்கல் சிறையிலிருந்து ஹைதராபாத் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லும் வழியில் ஐந்து முஸ்லிம் விசாரணைக் கைதிகளைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு ஈவிரக்கமின்றி படுகொலை சம்பவங்களுக்கு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கடும் கண்டனத்தையும் ஆழ்ந்த கவலையையும் தெரிவித்துள்ளது. கடந்த…

ஜ.இ.ஹி-ன் புதிய மத்திய ஆலோசனைக்குழு தேர்வு

அகில இந்திய தலைவர் தேர்வை தொடர்ந்து மத்திய ஆலோசனைக் குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ************************************************************* 1. சையத் சஆதத்துல்லாஹ் ஹுஸைனி (தெலுங்கானா) 2. எஞ்சினியர் முஹம்மத் சலீம் (இராஜஸ்தான்) 3. நுஸ்ரத் அலீ (உத்திரப் பிரதேசம்) 4. எஸ் அமீனுல் ஹஸன் (கர்நாடகம்) 5. முஹம்மத் ஜஃபர் (பீகார்) 6,…

மெளலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அகில இந்திய தலைவராக தேர்வு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 2015 – 2019 ஆண்டிற்கான அகில இந்திய தலைவராக மௌலானா சையத் ஜலாலுதீன் உமரி அவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர்: ஓர் அறிமுகம் ********************************************************************************** தமிழகத்தைச் சேர்ந்தவர் ********************************** மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் 1935-இல் வேலூர் மாவட்டம் திருப்பத்தூருக்கருகே புத்தகரம் கிராமத்தில் பிறந்தார்கள்.…

கோவையில் “சுவனப்பாதை” இஸ்லாமியக்கண்காட்சி

கோவை மாநகரின் கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் பயிலும் மாணவியர் சார்பில் பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 1, 2015 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் ‘சுவனப்பாதை’ எனும் மையத்தலைப்பில் இஸ்லாமியக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. தினசரி காலை 10 – 00 மணி முதல் மாலை…

திருப்பூரில் உளத்தூய்மை நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளையின் சார்பாக 21-12-2014 ஞாயிறு காலை 10 முதல் மாலை 6 மணிவரை “மறுமை பிரச்சார வாரம்”த்தை முன்னிட்டு ஒரு நாள் சிறப்பு தர்பியத் (பண்பு பயிற்சி)முகாம் மஸ்ஜிதுல் ஹுதா மேல் தளத்தில் நடைபெற்றது. இம் முகாமிற்க்கு சிறப்பு பேச்சாளராக மௌலவி சித்தீக் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.  KM முஹம்மது…

கோவையில் பல்சமயக் கருத்தரங்கம்

தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் டிசம்பர் 21, 2014 முதல் ஜனவரி 15, 2015 வரை மாநிலம் முழுவதும் “மறுமையை நோக்கி” என்ற பரப்புரை நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அதன் ஓர் நிகழ்வாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக பல்சமயக் கருத்தரங்கம் இன்று, ஜனவரி 11, 2015 (ஞாயிறு) மாலை 6:30…