Category: இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT)

பத்திரிகையாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் (IFT) சார்பில் 13.08.2014 அன்று மாலை ஊடகவியலாளர்களுக்கான நோன்புப் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஐ.எஃப்.டி வளாகத்தில் நடைபெற்றது. மெளலவி முஸம்மில் புகாரி அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலத்தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். அதன் பிறகு நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் தங்களது…

IFT வழங்கும் மனிதகுல சேவைக்கான எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருது 2013

மனித குலத்தின் வெற்றிக்காக, மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகத் தேவைப்படுகின்ற தூய நற்கருத்துகளைத் தமிழுலகிற்குத் தரவேண்டும் எனும் உன்னத குறிக்கோளுடன் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை Islamic Foundation Trust – IFT உருவாக்கப்பட்டது. கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் சமுதாய நல்லிணக்கத்திற்கும் இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனம் பல…

IFT கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலம் சார்பில் 2013-14 ஆம் கல்வி ஆண்டிற்கான IFT கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் சென்னை, ஈரோடு, கோவை மற்றும் திருச்சியில் நடைபெற்றது. இணையதளம் மற்றும் பத்திரிகை வாயிலாக கல்வி உதவித்தொகை அறிவிப்பு செய்து பெறப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆகஸ்ட் மாதம் திருச்சி,…

IFT சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஈத் பெருநாள் சந்திப்பு

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) சார்பில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சி அன்பர்கள் என பல்வேறு சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி IFT வளாகத்தில் நடைபெற்றது. இறைவசனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது,  IFTயின் இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களில் திரு.வீரையன், ஃபெரேரா, பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ், லேனா தமிழ்வாணன் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் என பல்வேறு நபர்கள் வாழ்த்துரை…

ஆம்பூரில் புத்தக வனம் – நடமாடும் புத்தக நிலையத்திற்கு வரவேற்பு

ஆம்பூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் ஐ.எஃப்.டி-யின் நடமாடும் புத்தக நிலையமான புத்தக வனத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு கைலாசகிரி ஊராட்சி தலைவர் டி.நடராஜன் தலைமை தாங்கினார். எழுத்தாளர் அழகிய பெரியவன், மாச்சம்பட்டு பள்ளி தலைமையாசிரியர் சி.பி.மஹாராஜன், ஜ.இ.ஹி பொறுப்பாளர் மெள. ஜமாலுத்தீன் உமரி மற்றும் சிறப்பு விருந்தினர் பல இந்நிகழ்ச்சியில் கலந்து…

IFT-யின் 6 புதிய புத்தகங்கள் வெளியீடு

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை IFT சார்பில் 14.01.2013 அன்று மாலை 36வது சென்னை புத்தகக்காட்சி புன்னகை அரங்கில் 6 புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. மெளலவி முஸம்மில் அவர்களின் திருமறை வசனம் ஓத புத்தக வெளியீட்டு நிகழ்வு துவங்கியது. IFT இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் வரவேற்புரை வழங்கினார். IFT பொதுச்செயலாளர் ஹெச்.அப்துர் ரகீப் அவர்கள் தலைமையுரையாற்றினார்.…

புத்தக வனம் – நடமாடும் புத்தக நிலைய பயணத்தின் துவக்கவிழா

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) சார்பில் நடமாடும் புத்தக நிலையம் (Mobile Book Shop) புத்தக வனம் துவக்க விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் உள்ள இக்‌ஷா புத்தக நிலையத்தில் 20.12.2012 அன்று மாலை நடைபெற்றது. ஜனாப் அஹமத் கபீர் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஐ.எஃப்.டி-யின் பொதுச்செயலாளர் அப்துர் ரகீப் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.…

IFT சார்பில் பத்திரிகையாளர்-களுக்கான நோன்பு பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) சார்பில் சென்னை பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சி அன்பர்கள் என பல்வேறு சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி 29.8.2012 ஐஊகூ வளாகத்தில் நடத்தப்பட்டது. இறைவசனத்துடன் நிகழ்ச்சி ஆμம்பமானது,  IFTயின் இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களில் சகோதரர் பெராரே, அமீர் அப்பாஸ், டாக்டர் அப்துல்லாஹ் மேலும் மூத்த எழுத்தாளர்கள் என பல்வேறு நபர்கள் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப்…

அமெரிக்காவிலுள்ள செயின்ட் ஓலஃப் கல்லூரி மாணவ மாணவியர் IFT வருகை

அமெரிக்காவிலுள்ள  செயின்ட் ஓலஃப் கல்லூரி மாணவ மாணவியர் 29.08.2012 அன்று  காலை IFT அலுலகம் வந்தனர்.  அவர்கள் இஸ்லாம் மற்றும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை பற்றி  புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர்களது வருகை அமைந்திருந்தது. மாணவ மாணவியரின்  இஸ்லாம் பற்றி பல்வேறு  கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்  த்ளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. IFT யின் தலைவர் ஷப்பீர் அஹ்மத், மவ்லவி  ஹனீபா மன்பஈ ,…

IFT – யின் புதிய வெளியீடுகள்

ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் பாகம் – 1 (இஸ்லாமிய சட்டக் கருவூலம்) ஆசிரியர்: அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் தமிழில்: மௌலவி நூஹ் மஹ்ழரி ISBN 978 81 232 0254 9  Price: INR 80.00  “ஒரு மத்ஹபுக்கு மட்டும் ஆதரவாகவோ, எதிராகவோ அல்லாமல் நபிவழியில் இஸ்லாமியச் சட்ட விளக்கங்களை விவரிக்கும் முறையில் ஃபிக்ஹுஸ் ஸுன்னா சாதனை படைத்துள்ளது.”–டாக்டர் யூஸுப் அல்கர்ளாவி ‘இஸ்லாமியச்…