திருச்சியில் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம்

மதுவிற்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம் 2.1.2011 அன்று திருச்சியில் நடைப்பெற்றது.  ஜ.இ.ஹி. மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.ஜலாலுதீன், குடி போதை மாற்றுத் திறன் மையத்தின் திட்ட இயக்குனர் திரு.பாரதி மோகன், பெண்கள் முன்னனி கரூர் மாவட்ட பொருளாளர் திரு.ஆர். ஜானகி மற்றும் ஜ.இ.ஹி-ன் திருச்சி மாநகரத் தலைவர் சையத் முஹம்மத் ஆகியோர் மதுவிற்கு எதிராக உரையாற்றினர்.  300க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

மேலும் மாபெரும் கையெழுத்து இயக்கமும் நடைப்பெற்றது. 1000க்கும் அதிகமானோர் தங்களது கையெழுத்து மூலம் மது விலக்கை அமல்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.