கும்பகோணத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்

4.1.2011 மாலை 4.30 மணிக்கு கும்பகோணம் காந்தி பார்கிலிருந்து மாபெரும் பேரணி துவங்கி மகாமக குளம் அருகில் பொதுக்கூட்டத்துடன் நிறைவுப்பெற்றது.     கும்பகோணம் கிஸ்வா அமைப்பின் தலைவர் சகோதரர் H.அன்ஸர் அலி கொடியசைத்து பேரணியைத் துவக்கிவைத்தார்.  சகோதரர் முஹம்மத் யூசுஃப் அவர்கள் வழிநடத்தினார்.  அறிமுக உரை சகோதரர் முஹம்மத் யூனுஸ் நிகழ்த்தினார்.  மன்னார்குடி ஜ.இ.ஹி பொறுப்பாளர் சகோதரரி சமீமா பேகம் மற்றும் ஆடுதுறை சகோதரரி ஆயிஸா மதுவினால் பாதிக்கப்படும் பெண்களின் நிலையை பகிர்ந்துக் கொண்டனர்.  கோசங்கள் முழங்க கொட்டும் மழையிலும் பேரணி நடைப்பெற்றது.

இறுதியாக பொதுக்கூட்டம் மகாமகம் குளம் அருகில் நடைப்பெற்றது. பாடம் பத்திரிகை ஆசிரியர் அ.நாராயணன், ஜ.இ.ஹி செயலாளர் சிக்கந்தர் மற்றும் மனித நேய சங்கமம் நிறுவனர் மார்ட்டின்  ஆகியோர் உரையாற்றினர்.  சகோதரர் சஃபீக்குர் ரஹ்மான் வழிநடத்தினர்.

200க்கும் அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.