கோவை கலெக்டரிடம் மனு

ஜ.இ.ஹி கோவை மாநகரத் தலைவர் சையத் இப்ராஹிம் தலைமையில் உறுப்பினர்க் குழு 3.1.2011 அன்று கோவை மாவட்ட கலெக்டரை சந்தித்து மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுவை வழங்கினர்.  மதுவினால் பாதிக்கப் படுவோரின் நிலையை எடுத்து வைக்கும் நிகழ்வுகளும் நடைப்பெற்றது.

மெகா கையெழுத்து பிரச்சாரமும் நடைப்பெற்றது.

சகோ. அக்பர் அலி தலைமையில் சமூக ஆர்வலர்களை சந்தித்து கையெழுத்து வாங்கினர்.

சகோ. முஹம்மத் இப்ராஹிம் தலைமையில் 24 நபர் கொண்டக் குழு செல்வபுரம் பகுதியிலும், சகோ. முஹம்மத் அலி தலைமையில் கணபதி நகரிலும் மற்றும் சகோ. ஜலில் தலைமையில் மைல்கல் பகுதியிலும் மதுவிற்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது.