இறைத்தூதர் வாரம்-சென்னை மாநகர வழிகாட்டுதல் நிகழ்வு

இறைத்தூதர் வாரம் வருகிற பிப்ரவரி 2 முதல் 13 வரை நடைபெற இருக்கிறது.  இவ்வாரத்திற்கான பணிகளை விளக்கவும், ஊழியர்களுக்கு தூதுத்துவத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் வகையில் 23.1.2011 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை சென்னை மாநகர ஊழியர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்வு நடைபெற்றது.  சகோ. அப்துல் காதர் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.  ஜ.இ.ஹி. மாநிலத் தலைவர் துவக்கவுரை நிகழ்த்தினார்.  மெளலவி நூஹ் மஹ்ளரி அவர்கள் தூதுத்துவத்தின் வழிகாட்டுதல்களை முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து விளக்கினார்.  பிறகு தூதுத்துவத்தின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சகோ.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் உரையாற்றினார்.  அவரை தொடர்ந்து சமரசத்தின் துணை ஆசிரியர் சகோ. சையத் சுல்தான் மனித வரலாற்றில் தூதுவத்தின் பரினாமங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.  சென்னை மாநகரத் தலைவர் சகோ.இம்ரான் லத்திஃப் சேட் மாநகர பணிகளை விளக்கினார்.  இறுதியாக மாநில அழைப்பியல் துறை செயலாளர் சகோ. நாசர் இவ்வாரத்தின் நோக்கத்தை விளக்கினார்.