மதுவிற்கெதிரான மக்கள் கையெழுத்தை முதல்வரிடம் சமர்பிப்பு

மதுவிற்கு எதிராக மாபெரும் பிரச்சார இயக்கம் தமிழகமெங்கும் சிறப்பாக நடைபெற்றது.  இவ்வாரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மக்களிடம் மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று 1லட்சம் மக்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது.  மக்களிடம் வாங்கப்பட்ட கையெழுத்து மற்றும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை 7.2.2011 திங்கள் கிழமை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநிலக் குழு தலைமை செயலகம் சென்று முதல்வரின் முதன்மை செயலாளரிடம் வழங்கியது.  இக்குழுவில் மாநில மது எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் அமைப்பாளர் சகோ.ஜான் முஹம்மத், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோ.அப்துர் ரஹீம், செயலாளர்கள் சகோ.நசீருல்லாஹ் மற்றும்  சகோ.சிக்கந்தர் ஆகியோர் சென்றிருந்தனர்.