புதுச்சேரியில் இறைத்தூதர் வார சிறப்பு நிகழ்ச்சி

20.2.2011 அன்று காலை 10.30மணிக்கு இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  புதுச்சேரி ஜமாஅத் பொறுப்பாளர் சகோ.அஃப்சல் கிராஅத் ஓதினார்.  அதன் பிறகு முன் மாதிரி முஸ்லிம் என்ற தலைப்பில் மாநில அழைப்பியல் துறை செயலாளர் சகோ.நாசர் உரையாற்றினார்.  அவரைத் தொடர்ந்து சகோ.கே.ஜலாலுதீன் (மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர்) இன்றைய பிரச்சனைகளும் இஸ்லாம் வழங்கும் தீர்வுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  பேராசிரியர் சையத் இப்ராஹீம் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.  50 நபர்களுக்கும் மேல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.  புதுச்சேரி அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.