இறைதூதர் வாரம் திருப்பூர், தேனி மாவட்டங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாநகரக் கிளையின் சார்பாக 13.2.2011 அன்று மாலை சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ். ஷாஹுல் ஹமீத் இறைமறை வசனங்களை ஓதினார். கோவை மண்டல அமைப்பாளர் கே.எம். முஹம்மத் தலைமை தாங்கினார். அனைவரையும் கே.பி.ஹஸன் வரவேற்றார். கோவை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பண்பியல் துறைத் தலைவர் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் இம்தாதி சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியப் பெருமக்கள், பட்டதாரிகள், வணிகர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வருகை தந்த சகோதர சமுதாயப் பெருமக்களுக்குத் திருக்குர்ஆன் அன்பளிப்பாய் வழங்கப்பட்டது. தேநீர் விருந்தும் நடைபெற்றது. இந்நிகழ்வை அழைப்பாளர் அன்வர்தீன் தொகுத்து வழங்கினார். எம். முஹம்மத் அலீ நன்றி கூறினார்.                                                                                                      – திருப்பூரிலிருந்து முஹம்மத் இம்ரான்

 

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தேனி வட்டத்தின் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் 9.2.2011 அன்று அய்யா ஆங்கிலப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஜமாஅத்தின் தென் மண்டல அமைப்பாளர் எஸ்.முஹம்மத் அப்பாஸ், அய்யா கல்வி நிறுவனங்களின் தலைவர் அன்பு வடிவ லிங்கம், இஸ்லாமிய இளைஞர் ஜமாஅத்தின் ஆலோசகர் சை. ஹக்கீம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். திருச்சி மாநகரத் தலைவர் ஜி. சையத் முஹம்மத் சிறப்புரையாற்றினார். தேனி ஊழியர் வட்டப் பொறுப்-பாளர் எஸ். அபுதாஹிர் ராஜா அனைவரையும் வரவேற்றார். இந்திய தேசிய லீகின் தேனி மாவட்டத் தலைவர் ஷஃபி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். எஸ்.முஹம்மத் பிலால் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.           – தேனியிலிருந்து அபுதாஹிர்

 

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சென்னை புறநகர் பெண்கள் வட்டத்தின் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி 12.2.2011 அன்று ஆதம்பாக்கத்தில் நடைபெற்றது. கவ்ஸர் இறைமறை வசனங்களை ஓத, சல்பியா மொழிபெயர்ப்பை வாசித்தார். மாஹின் சுல்தானா வரவேற்க, ஷீரின் கரீம் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத்தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ சிறப்புரையாற்றினார். இஸ்லாமிய அழைப்புப் பணியின் நோக்கம், ஓரிறைக் கொள்கையின் அவசியம் குறித்து விளக்கிய அவர், இந்த உலக வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டுதல் தேவை. அந்த வழிகாட்டுதலை இறைவன் மட்டுமே தர முடியும். அதனை மக்களிடம் விளக்கி, வாழ்ந்து காட்டிய முன்மாதிரி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆவார் என்றார். மறுமையின் முக்கியத்துவத்தை அழகிய உதாரணங்கள் மூலம் புரிய வைத்த விதம் அருமையாக இருந்தது.இந்நிகழ்வை மெஹருன்னிஸா தொகுத்து வழங்கினார். கமருன்னிஸா நன்றி கூறினார். கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

– ஆதம்பாக்கத்திலிருந்து ஜரினா ஜமால்