கோவையில் பொதுக்கூட்டம்

மெளலவி நூஹ் மஹ்ளரி உரை

27.2.2011 அன்று கோவை கோட்டை இக்பால் திடலில் இறைத்தூதர் வாரத்திற்கான சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  SIO சகோ. நிஸார் கிராஅத் ஓதினார்.  அவரை தொடர்ந்து கோட்டை JIH கிளை தலைவர் சகோ.அபுதாஹிர் வரவேற்புரையாற்றினார். JIH கோவை மாநகர தலைவர் சகோ.கே.ஏ.சையத் இப்ராஹிம் தலைமையுரையாற்றினார்.  பிறகு சகோ.ஆசிக் அலி சிற்றுரையாற்றினார். பிறகு மெளலவி இஸ்மாயில் இம்தாதி நபி நேசமா? அப்படியென்றால்… என்ற தலைப்பில் உரையாற்றினார், மெளலவி நூஹ் மஹ்ளரி தூதுவ செய்தியும் நமது கடமையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.  1000க்கும் அதிகமான மக்கள் இப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  JIH கோட்டை கிளை செயலாளர் சகோ.காஜா நஜ்முத்தீன் நன்றியுரையாற்றினார்.  சகோதரர் சலீம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.