திருச்சியில் மாபெரும் அரங்கக் கூட்டம்

திருச்சி தேவர் மஹாலில் திரண்டிருந்த மக்கள்

இறைத்தூதர் வாரத்தை முன்னிட்டு திருச்சியில் 6.3.2011 ஞாயிறு மாலை தேவர் மஹாலில் நடைபெற்றது.  சகோ.அப்பாஸ் அவர்களின் குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.  திருச்சி மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பொறுப்பாளர் சகோ.சையத் முஹம்மத் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.  மண்ணக மக்களுக்காய் விண்ணக தூது என்ற தலைப்பில் டாக்டர் KVS.ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.  இஸ்லாம் என்பது வாழ்வியல் கோட்பாடு என்ற தலைப்பில் திரு.தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்கத் தலைவர்) உரையாற்றினார்.  இறைத்தூதர் வாழ்விலிருந்து பல்வேறு விஷயங்களை எடுத்து வைத்தார்.  அவரை தொடர்ந்து மாநில அழைப்பியல் துறை செயலாளர் T.E.நாசர் நன்றியுரையாற்றினார்.  இந்நிகழ்வில் 1200க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

டாக்டர் KVS உரையாற்றுகிறார்