திருச்சியில் ஆசிரியர்களுக்கான AIITAவின் சிறப்பு நிகழ்ச்சி

திருச்சியில் AIITA நிகழ்ச்சி

திருச்சி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் AIITA (All India Ideal Teachers Association) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆசிரியர்களை ஒருங்கினைத்து AIITA அமைப்பை நடத்தி வருகிறது.  ஆசிரியர்களின் திறமைகளும், ஆற்றல்களும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் ஆசிரியர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

திருச்சி வரகனேரியுள்ள மதர் நர்சரி & ப்ரைமரி பள்ளிக்கூட வளாகத்தில் மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.  தொடக்கமாக முனைவர் அப்துர் ரஜாக் அவர்கள் திருமறை விரிவுரையாற்றினார்.  அவரை தொடர்ந்து முனைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் ஆசிரியர்கள் பணி குறித்தும் இஸ்லாமிய கண்ணோட்டம் குறித்தும் விரிவுரையாற்றினார்.  அவரை தொடர்ந்து ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர். இந்நிகழ்ச்சி மூலம் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியும், தங்களது பணியின் அவசியம் குறித்து பல்வேறு செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

முனைவர் அப்துல் அஜீஸ் உரையாற்றுகிறார்