SIO -வின் மதுரை மற்றும் கோவையில் மண்டல மாநாடு

அமைச்சர் திரு.வேலுமணி உரையாற்றுகிறார்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழக மண்டலத்தின் சார்பில் மதுரை மற்றும் கோவையில் மண்டல மாநாடுகள் நடைபெற்றது.  18.9.2011 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் காலை அமர்வில் எஸ்.ஐ.ஓ-வின் முன்னாள் அகில இந்திய தலைவர் சகோ.பிஷ்ருத்தீன் ஷர்கீ அவர்களும், கோவை மெளலவி இஸ்மாயில் இம்தாதி அவர்களும் சிறப்புரையாற்றினர்.  மதியம் மதுரை வக்ப் போர்டு கல்லூரியிலிருந்து காந்தி மீயூசியம் வரை மாணவர் பேரணி நடைபெற்றது.

அதை தொடர்ந்து மதுரை கோரிபாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  சகோ.பிஷ்ருத்தீன் சர்க்கீ மற்றும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

25.9.2011 அன்று கோவையில் நடைபெற்ற மாநாட்டில் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத், எஸ்.ஐ.ஓ முன்னாள் அகில இந்திய தலைவர் சகோ.சுஹைல் மற்றும் மெளலவி நூஹ் மஹ்ளரி ஆகீயோர் உரையாற்றினர்.  மதியம் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திலிருந்து வ.ஊ.சி பூங்கா வரை மாபெரும் பேரணி நடைபெற்றது.  அதை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் திரு.வேலுமணி, சாந்தி ஆசிரமத்திலிருந்து டாக்டர் விணுஅரம் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள்.