AIITA-வின் திருச்சி கிளை துவங்கப்பட்டது

AIITA திருச்சி கிளை

08-01-2012 திருச்சியில் AIITA-வின் துவக்க விழா அதன் பொறுப்பாளர் முனைவர்.சலீம் கனி அவர்களின் தலைமையில் வரகனேரி மதர் நர்சரி & பிரைமரி பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக முனைவர்.அப்துல் ரஸ்ஸாக் அவர்கள் இறைமறையிலிருந்து சில வசனங்களை ஓதினார். பின்னர் திருச்சிக் கிளை AIITA-வின் பொறுப்பாளர் முனைவர்.சலீம் கனி அவர்கள் வரவேற்புரையாற்றினார். அதில் இக்கூட்டம் எதற்காக கூட்டப்பட்டுள்ளது. சமூதாய முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும், இப்போது எப்படி இருக்கிறது என்பதை விளக்கினார். மேலும் நாம் நம்முடைய மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்ற நோக்கத்தில் தான் AIITA அகில இந்திய அளவில் ஆரம்பிக்கப்பட்டது. அதே நோக்கத்தில் தான் AIITA திருச்சியிலும் துவங்கபட்டு இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டம் சிறப்பாக செயல்பட எல்லாவல்ல இறைவன் துணை நிற்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். அவரை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் AIITA-வின் சென்னை கிளை தலைவர் ஜனாப்.உமர் அவர்கள் AIITA அகில இந்திய அளவில் செய்துவரும் புரட்சியையும், தமிழக அளவில் அது கல்வி நிலையங்களில் எத்தகைய மாற்றங்களை கொண்டுவர உழைத்து வருகிறது என்பதையும் விரிவாக விளக்கி கூறினார்.

வாழ்த்துரையை தொடர்ந்து நிகழ்ச்சியின் சிறப்புரையாக “Education Scenario” என்ற தலைப்பின் கீழ் ஜமால் முஹம்மது கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜனாப்.உமர் சாதிக் அவர்கள் உரையாற்றினார். அவர் தமது உரையில் இன்றைய கல்வி மற்றும் ஆசிரியர்களின் நிலைகளைப் பற்றி விரிவாக பேசினார். மேலும் ஆசிரியர்கள் தங்களை எவ்வாறு முன்மாதிரியாக ஆக்கிக்கொள்ள வேண்டும், அதற்கான வழிமுறைகளையும் தம்முரையில் விளக்கி கூறினார். முனைவர்.ஹஜ் முஹைதீன் அவர்கள் திருச்சியில் AIITA-வின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். ஜனாப்.அப்துல் ஹக்கீம் அவர்கள் நன்றியுரையை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரியின் ஆசிரியர்கள்,ஆசிரியைகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை திருச்சி AIITA உறுப்பினrகள் சிறப்பாக செய்திருந்தனர்.