திருக்குர்ஆன் 23:14-17 – படைக்கும் கலையில் அனைத்தும் அறிந்தவன்

திருக்குர்ஆன் விரிவுரை

படைக்கும் கலையில் அனைத்தும் அறிந்தவன்

பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ்,14 படைப்பாளர்களில்லாம் மிக அழகான படைப்பாளன்! பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்! பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள். திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம்.15 மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவர்களாக இல்லை.16

14. மூலத்தில் ‘ஃபதபாரக்கல்லாஹ்’ என்கிற சொற்கள் அருளப்-பட்டுள்ளன. இவற்றின் முழுமையான பொருளையும் தாத்பர்யத்தையும் மொழிபெயர்ப்பது மிகவும் சிரமம்தான்.

அகராதியில் தரப்பட்டுள்ள பொருளையும், அவற்றின் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது அதற்கு இரண்டு பொருள்கள் புலனாகின்றன. 1. அனைத்துவிதமான குறைகளை விட்டும் பிழைகளை விட்டும் பலவீனங்களை விட்டும் மிகவும் தூய்மையானவன்; 2. அள்ள அள்ளக் குறை-யாத நன்மைகளுக்கும் சிறப்புகளுக்கும் வளங்களுக்கும் உரிய-வன் அவன். அவனுடைய நன்மைகள் எத்துணை என எவ்வளவுதான் கணித்தாலும் அதனை விட அதிகமாகவே அவனி-டம் நன்மைகள் நிறைந்திருக்கும். இன்னும் சொல்லப்-போனால் அவனுடைய சிறப்புகளுக்கு முடிவே இல்லை. (கூடுதல் விவரங்களுக்குப் பார்க்க: அத்தியாயம் அல் ஃபுர்-கானின் குறிப்பு எண் 1, 19)

இந்த இரண்டு பொருள்களையும் கருத்தில் கொண்டு ஆய்ந்து பார்க்கும்போது இங்கு இந்தச் சொற்கள் சொல்லப்பட்டதன் பின்னணி புரிகின்றது. மனிதனின் படைப்புருவாக்கத்தின் பல்வேறு படிநிலைகளை எடுத்துரைத்துவிட்ட பிறகு ஃபத-பாரக்கல்லாஹ் எனச் சொல்லப்பட்டுள்ளது வெறுமனே புகழுரை வாசகம் அல்ல! அதற்கு மாறாக சான்று எடுத்துரைக்கப்பட்ட பிறகு சான்றினால் ஏற்படுகின்ற விளைவு என்றே இதனைச் சொல்ல வேண்டும்.

களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்த இறைவன் அவனைப் படிப்படியாக வளர்த்து முழுமையான மனிதனாக ஆக்கிவிடுகின்ற பேராற்றல் படைத்த இறைவன் தன்னுடைய இறையாண்மையில் வேறு எவரையேனும் பங்கேற்கச் செய்வதை விட்டுத் தூய்மையானவன்; மேலானவன் என அழுத்தம்திருத்தமாக ஃபதாபரக்கல்லாஹ் என்கிற ஒற்றை முழக்கத்தின் மூலமாக அறிவிக்கப்படுகின்றது.

அதே மனிதனை மீண்டும் ஒருமுறை அவனால் படைக்க முடியாது என்பதை விட்டும் அவன் தூய்மையானவன். ஒரு தடவை மனிதனைப் படைத்து முடித்த கையோடு அவனுடைய ஆற்றல்-களும் வலிமைகளும் முடிந்துவிட்டன என்றும், அதற்குப் பிறகு அவனால் எதனையும் படைக்க முடியாது என்றும் சொல்வது அவனுடைய ஆற்றல்-களைப் பற்றிய மிக மோசமான, தவறான கணிப்பு ஆகும்.

15. மூலத்தில் ‘தராயீக்’ என்கிற சொல் ஆளப்பட்-டுள்-ளது. இதற்கு ‘பாதைகள்’, ‘அடுக்குகள்’ என இரண்டு பொருள்கள் உண்டு.

‘பாதைகள்’ என்கிற பொருளை எடுத்துக்கொண்டால் இங்கு ஏழு கோள்களின் சுழல் பாதைகள் குறித்துச் சொல்லப்படுகின்றது என விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் அந்தக் காலத்தில் மனிதன் ஏழு கோள்களை மட்டுமே அறிந்-திருந்தான். இதனால் ஏழு பாதைகள் குறித்து மட்டுமே சொல்லப்பட்டது. இந்த ஏழு பாதைகளைத் தவிர வேறு பாதைகள் இல்லை என்று இதற்குப் பொருள் அல்ல.

‘அடுக்குகள்’ எனப் பொருள் கொண்டால் அது வானங்-களைக் குறிக்கும். இதே பொருளில் அத்தியாயம் 67-இல் அல்முல்க் மூன்றாவது வசனத்தில் ‘அவனே ஏழு வானங்-களை அடுக்கடுக்காகப் படைத்தான்’ என எந்தப் பொரு-ளில் சொல்லப்பட்டுள்ளதோ அதே பொருளில்தான் இங்கும் ‘அடுக்குகளை’ எடுத்துக் கொள்ளலாம்.

‘உங்களுக்கு மேலே’ ஏழு பாதைகளை அமைத்தோம் என்-றும் இங்கே சொல்லப்பட்டுள்ளது. இதற்கும் இரண்டு பொருள்கள் உண்டு. முதலாவது இந்த வாக்கியம் உணர்த்-து-கின்ற நேரடிப் பொருள். இரண்டாவதாக ‘உங்களைப் படைத்ததைவிட மிகப்பெரும் வேலையாக இந்த வானங்களைப் படைத்துள்ளோம்’ என்கிற பொருளும் இதில் தொக்கி நிற்கின்றது. இதற்கு வலு சேர்க்கின்ற விதத்-தில் ‘வானங்களையும் பூமியையும் படைப்பது, மனிதர்-களைப் படைப்பதை விட நிச்சயம் மாபெரும் சாதனை-யாகும்’ என அத்தியாயம் 40 அல் முஃமினில் 57-ஆவது வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.

16. ‘படைப்புகளைக் குறித்து நாம் எதுவும் அறியாத-வராக இல்லை; இருந்ததுமில்லை’ என்றும் இதனை மொழிபெயர்க்கலாம்.
‘படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை’ என்கிற பொருளை எடுத்துக்கொண்டால் இறை-வனால் படைக்கப்பட்ட படைப்புகள் அனைத்தும் படைப்-புக் கலையில் தேர்ச்சியோ அனுபவமோ இல்லாத கத்துக்குட்டியால் மனம் போன போக்கில் படைத்துப் போடப்பட்டவையல்ல. அதற்கு மாறாக எல்லாமே தீர்க்க-மான, சரியான திட்டத்துடனும் நோக்கத்துடனும்தாம் படைக்கப்பட்டன. எல்லாக் கோணங்களிலும் நல்ல முறை-யில் ஆராயப்பட்டு வரையறுக்கப்பட்ட திட்டத்-தின்-படித-õம் அவை ஒவ்வொன்றும் படைக்கப்பட்டிருக்-கின்றன என்று அதற்குப் பொருளாகும்.

இன்னும் சொல்லப்போனால் படைப்புகள் அனைத்-தும் ஒன்றையொன்று சார்ந்தும் இணங்கியும் உள்ள-விதமும் அவற்றுக்கிடையில் காணப்படுகின்ற தொடர்பும் பிணைப்பும் ஒருங்கிணைப்பும் ஒற்றைத் திட்டத்துடன் அவை படைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதற்கான சான்றுகளாய் இருக்கின்றன. பேரண்டத்தில் இருக்கின்ற அனைத்துமே சில சட்டதிட்டங்களால் கோக்கப்-பட்-டிருக்-கின்றன. பேரண்டத்தின் சின்னஞ்சிறு அணுவிலிருந்து மிகப்பெரும் கோள்கள் வரை அனைத்திலும் ஒருங்-கிணை-வும் ஒத்திசைவும் காணப்படுகின்றன. பேரண்டத்தில் எந்தத் திசையில் திரும்பினாலும் எல்லாமே ஏற்கனவே தீர்ம-õனிக்கப்பட்ட குறிக்கோளின் படி இயங்குவதையும் படைத்தவனின் பேராற்றலையும் நிறைஞானத்தையும் வெளிப்படுத்துபவையாய் அவை ஜொலிப்பதையும் பார்க்க முடியும்.

‘படைப்புகளைக் குறித்து நாம் எதுவும் அறியாதவராக இல்லை; இருந்ததுமில்லை’ என்கிற பொருளை எடுத்துக்-கொண்டால் இறைவன் எந்தவொரு படைப்பைக் குறித்-தும் அறியாதவனாக இல்லை; படைப்புகளின் தேவைகள் குறித்தும் அவன் பாராமுகமாக இல்லை. படைப்புகள் எந்த நிலைமைகளில் இருக்கின்றன என்பதையும் அவன் அறியாதவனாக இல்லை. படைப்புகள் தொடர்பான அனைத்தையும் நன்கு அறிந்தவனாக அவன் இருக்-கின்-றான். இதனால் தான் வரையறுத்த நோக்கங்களுக்கும் திட்-டங்களுக்கும் மாறாக இம்மியளவுகூட செயல்படுவதை விட்டு அவன் தன்னுடைய படைப்புகளைத் தடுத்து வந்துள்ளான். எந்தவொரு படைப்பின் யாதொரு சிறிய தேவையையும் அவன் அறியாதவனாக இல்லை. அவன் எல்லாவற்றையும் அறிந்தவன்; அனைத்தையும் செய்து முடிப்பவன். சின்னஞ்சிறு துரும்பு அல்லது இலையின் தேவையும் நிலைமையும் அவனுக்கு அத்துபடி.