நபிமொழி விளக்கம் – தானியங்களைப் பதுக்காதே

நபிமொழி விளக்கம்

தானியங்களைப் பதுக்காதே!

அமர்(ரலி) அறிவிக்கின்றார்:

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘(இலாப விகிதத்தை அதிகரித்துக்கொள்ள வேண்-டும் என்கிற நோக்கத்துடன்) தானியங்களை விற்காமல் நிறுத்தி வைத்தவன் பாவி ஆவான்.’ (நூல் : முஸ்லிம்)

மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் உணவாக இருக்கக்கூடிய தானியங்களை விற்கா-மல் நல்ல விலைக்காக நிறுத்திவைப்பது உணவுத் தானியங்களைப் பதுக்கிவைப்பதாகும்.

எடுத்துக்காட்டாக, அரிசி, அரிசி என மக்கள் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்க அரிசி தட்டுப்-பாடு இருக்கின்ற வேளையில் ஒருவர் பெரும் அளவுக்கு அரிசியைக் கொள்முதல் செய்கின்றார்; ஆனால் அதை உடனுக்குடன் விற்காமல் நிறுத்தி வைக்கின்றார்; விலை உயர்ந்த பிறகு அதிக இலாப விகிதத்தில் விற்று கொள்ளை இலாபத்தை ஈட்டிக் கொள்ளலாம் எனக் கணக்கு போடுகின்-றார் எனில் அவர் பாவி ஆவார். இது உணவுத் தானி-யங்களைப் பதுக்கி வைப்பதற்கு சமமாகும். ஷரீஅத் இதனை ஹராம் எனத் தடை செய்-துள்ளது. தானியத் தட்டுப்பாடு எதுவும் இல்லாத வேளையில் மக்களுக்கு தானியங்கள் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நாள்களில் ஒருவர் தானியங்களை வாங்கி உடனுக்குடன் அவற்றை விற்றுவிடாமல் பொருத்தமான விலை கிடைக்கின்றபோது பொருத்தமான நேரத்தில் விற்கின்ற நோக்குடன் அவற்றைத் தம்மிடம் வைத்துக்கொள்கின்றார் அல்லது தமது நிலத்தில் அறுவடையான தானியங்களை உடனுக்குடன் விற்றுவிடாமல் தக்க நேரத்தில் தகுந்த விலையில் அவற்றை விற்கின்ற நோக்குடன் அவற்றைச் சேர்த்து-வைக்கின்றார் எனில் அது பதுக்கல் ஆகாது.

அபூ உமாமா(ரலி) அறிவிக்கின்றார்:

அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘உண-வுத் தானியங்களை விற்காமல் நாற்பது நாள்கள் வரை ஒருவர் நிறுத்தி வைக்கின்றார் எனில், அதன் பிறகு அவர் அதனைத் தானமாகக் கொடுத்துவிட்டாலும் அது அவருடைய பாவத்துக்கு பரிகாரம் ஆகாது.’ (நூல் : ரஜீன்)
மனிதர்களும் பிற உயிரினங்களும் உணவு கிடைக்காமல் தத்தளித்துக் கொண்டிருக்கிருக்-கின்ற போது ஒருவர் நாற்பது நாள்கள் வரை ‘நல்ல விலை’ அமைவதற்காக தானியங்களை விற்காமல் நிறுத்தி வைக்கின்றார் எனில், அவற்றைச் சந்தைக்கும் கொண்டு வருவதில்லை; இறைவனின் படைப்-புகள் அவற்றிலிருந்து பயனீட்டிக்கொள்ள அனுமதிப்பதுமில்லை எனில், அவர் பாவி ஆவார்.

இறைவனுடைய பார்வையில் இத்தகைய பேராசை பிடித்த வணிகர் மிகப்பெரும் குற்றவாளி ஆவார். இவ்வாறு நாற்பது நாள்கள் வரை மக்களை அலைக்கழிக்க வைத்துவிட்டு அவர் தாம் செய்த தவற்றை உணர்ந்து அந்த தானியங்கள் அனைத்தையும் தானமாகக் கொடுத்துவிட்டாலும் அவர் செய்த பாவத்துக்கு அவருடைய தானம் பரிகாரம் ஆகாது.

வாஸிலா பின் அஸ்கா(ரலி) அறிவிக்-கின்-றார்: அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்: ‘ஒருவர் தாம் விற்கின்ற பொருளில் உள்ள குறை-யையும் பழுதையும் மறைத்துவிட்டு அல்லது அந்தக் குறை குறித்துச் சொல்லாமல் அதனை விற்கின்றார்; அவருடைய பேரமும் உறுதியாகின்றது எனில் அவர் என்றென்றும் இறைவனின் கோபத்துக்கு உரியவராகிவிடுகின்றார். அல்லது அவரை வானவர்கள் என்றென்றும் சபித்துக்கொண்டே இருக்கின்றனர்.’ (நூல் : இப்னு மாஜா)

விற்கின்ற பொருளில் குறை இருப்பின் வாடிக்கையாளரிடம் சொல்லிவிட்டே அதனை விற்க வேண்டும். இல்லையேல் வாங்குபவர் பெரும் மன உளைச்சலுக்கும் இழப்புக்கும் உள்ளாகின்றார். இதனால்தான் குறையை மறைத்துப் பொருளை விற்கின்றவர் எந்நேரமும் இறைவனின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாவதுடன் வானவர்களும் அவரை சபித்துக்கொண்டே இருக்கின்றனர்.