GIO கல்வி விருது 2012 – கோவையில் விருது விழா

விருது விழாவில் கலந்து கொண்ட மாணவிகள்

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கோவை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளை ஊக்கப்படுத்தி உற்சாகம் ஊட்டும் வகையில் GIO கல்வி விருது வழங்கப்பட்டது. கோவை, கரும்புக்கடை JB மஹாலில் 01-07-2012 (ஞாயிறு ) அன்று காலை 10 மணி அளவில் இந்த பரிசளிப்பு விழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் திருமதி. ஹேமா கருணாகரன் IPS., அவர்களும் , கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக முதன்மையர் முனைவர் ஜெரினா பீ M.Com., Dip.Edu., M.Phil., Ph.D., அவர்களும் கலந்து கொண்டனர்.

கோவை மாநகர அளவில் பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவிகள் கலந்து கொண்டனர்.