ரமளானை முன்னிட்டு G.I.O கோவை கிளையின் சார்பாக மாணவிகளுக்கான சிறப்புக் கூட்டம்

“இறைவா…உன் வாசலில்..!” என்கின்ற தலைப்பில் 15.7.2012 ( ஞாயிறு ) அன்று காலை 10 மணிக்கு கோவை, கரும்புக்கடையில் உள்ள ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியில் கோவை GIO அமைப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
ஆரம்பமாக சகோ.நிஷானா அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.   இந்த நிகழ்ச்சியில், மதுரை, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் மண்டல அமைப்பாளர் ஜனாபா.H.ஜரீனா யூசுப் அவர்கள் ரமளான்  மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள், போன்றவாற்றைக் குறித்து சிறப்புரையாற்றினார்.
அடுத்தபடியாக மாணவிகளின் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், “ரமளானும் அருள்வளங்களும்” என்கிற தலைப்பில் சகோ.ரம்லத் அவர்களும்,
“ரமளானும் பாவமன்னிப்பும்” என்கிற தலைப்பில் சகோ.ஷபீகா அவர்களும்,
“ரமளானும் நரக விடுதலையும்” என்கிற தலைப்பில் சகோ.ஆரீபா அவர்களும், “ரமளானும் லைலத்துல் கத்ரும்”  என்கிற தலைப்பில் சகோ.தஸ்னீம் முபீன் அவர்களும் உரையாற்றினார்கள். சிறப்பு விருந்தினராக கோவை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்  மகளிர் அணி தலைவி ஜனாபா.P.S.அஸ்மாபி கலந்து கொண்டார்.
சகோ. சலீனா அவர்களின் நன்றியுரையோடு கூட்டம் நிறைவு பெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில் ஜரினா யூசுஃப் உரையாற்றுகிறார்

இஸ்லாமிய மாணவியர் அமைப்பு.
GIRLS ISLAMIC ORGANISATION (G.I.O)