SIOவிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கான சிறப்பு முகாம்

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

SIO-விலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி 26.08.2012 அன்று சென்னை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. சமரசத்தின் துணை ஆசிரியர் சையத் சுல்தான் அவர்களின் திருக்குர்ஆன் விரிவுரையுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநில தலைவர் ஜனாப் ஏ.ஷப்பீர் அஹ்மத் அவர்கள் தலைமையுரையாற்றினார். எஸ்.ஐ.ஓ மாணவர்களுக்கான ஆளுமைகளை வளர்த்து கொள்ளும் பயிற்சி களம். பயிற்சி பெற்று பயனுள்ளவர்களாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்திற்கு வரவேண்டும் என்ற நோக்குடன் தான் எஸ்.ஐ.ஓ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜமாஅத்திற்கு தலைவர்கள் துடித்துடிப்பான ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் எஸ்.ஐ.ஓவிலிருது வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இனி வரும் காலங்களிலும் அதிக எண்ணிக்கையில் எஸ்.ஐ.ஓவிலிருந்து அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் வர வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார்.

பிறகு இயக்க தலைவர்களின் வரலாற்றை பட்டியலிட்டு அழகாக பி.பி.டி மூலம் டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் அவர்கள் விளக்கினார். அவரை தொடர்ந்து தனிநபர் வாழ்வில் தீனை நிலைநாட்டுதல் என்ற தலைப்பில் கே.ஜலாலுதீன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

ஜனாப் பி.எம்.யூசுஃப் அவர்கள் உரையாற்றுகிறார்

மதிய அமர்வில் இஸ்லாமிய இயக்கத்திற்கு நிபுனர்களின் அவசியம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடலை வழிநடத்தி ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் வாணியம்பாடி கிளைத்தலைவர் ஜனாப் பி.எம்.யூசுஃப் அவர்கள் தொகுப்புரை வழங்கினார்கள்.

கூட்டமைப்புடன் வாழ்வதின் முக்கியத்துவத்தையும், கூட்டமைப்பு தான் மறுமை வெற்றிக்கான சிறந்த வழி என்ற கருத்துகளுடன் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில பொதுச்செயலாளர் மெளலவி ஹனிஃபா மன்பஈ சிறப்புரையாற்றினர்.

பிறகு கேள்வி பதில் நிகழ்வு நடைபெற்றது. இறுதியாக மாநிலத்தலைவர் நிறைவுரையாற்றினார்.

 

 

1 comment for “SIOவிலிருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கான சிறப்பு முகாம்

  1. Nazeer Ataullah
    August 27, 2012 at 3:12 pm

    One of the purpose of SIO’s formation is to supply cadre to its parent organization. Jamaat stands for a noble cause of enlightening the message of the Creator to the people of India although the message is universal and for the entire human being. Hence entry of new people with new talents adds value and strength which is imminent for any ideological organization. Happy to note the timely reminded by the Jamaat Leadership to the SIO outgoing members. I would like to say to our brothers that let not our professions, businesses or social life hinder our life’s Mission & Vision.

Comments are closed.