அமெரிக்காவிலுள்ள செயின்ட் ஓலஃப் கல்லூரி மாணவ மாணவியர் IFT வருகை

அமெரிக்காவிலுள்ள  செயின்ட் ஓலஃப் கல்லூரி மாணவ மாணவியர் 29.08.2012 அன்று  காலை IFT அலுலகம் வந்தனர்.  அவர்கள் இஸ்லாம் மற்றும் இந்தியாவில் முஸ்லிம்கள் நிலை பற்றி  புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அவர்களது வருகை அமைந்திருந்தது. மாணவ மாணவியரின்  இஸ்லாம் பற்றி பல்வேறு  கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும்  த்ளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. IFT யின் தலைவர் ஷப்பீர் அஹ்மத், மவ்லவி  ஹனீபா மன்பஈ , கே.எம். சிராஜ் அகமது, மவ்லவி நூஹ் மஹ்ளரி, அஜீஸ் லுத்புல்லாஹ் , ஐ.  கரிமுல்லாஹ் ,  ஆதில்  சேட், யூசுப் பாடஷா மற்றும் கே . ஜலாலுத்தீன் ஆகியோர்  மாணவ மானவியரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். புனித குர்ஆன் ஆங்கிலம் மொழிபெயர்ப்பு மற்றும் சில புத்தகங்கள் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. பின்வரும் தங்கள் பதிவுகள் சில:
மிச்சேல்: “இது ஒரு அற்புதமான  அனுபவமாக இருந்தது “, என்றார். நான் இஸ்லாம் ஓர்  அமைதி அமைதி மார்க்கம் என்பதை அறிந்து மகிழ்ந்தேன், நன்றி. “
சாரா கெம்ப்:  “நன்றி, இஸ்லாம் குறித்து எனக்கு முன்பு தெரியாது இன்று நிறைய கற்றுகொண்டேன் “
கிப்தி  கரப்பே : ” உங்கள் எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. உங்கள் விருந்தோம்பல் எங்களை நெகிழச் செய்தது. “
லியா ச்விங்கேர் : “உங்கள் அற்புதமான விருந்தோம்பல் மற்றும் திறந்த ,மனத்துடன் எங்களுடன் நேர்மையான உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி”.
நடாலி ஹோப்மேயச்ட்டர் : “இஸ்லாம் இந்தியாவில் நடைமுறையில் எப்படி பின்பற்றப்படுகிறது என்பதை அறிய இது ஒரு சிறந்த  வாய்ப்பு மிகவும் நன்றி. உங்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லெண்ணததை  உண்மையிலேயே பாராட்டுகிறோம்! “