SIOவின் 2013-14ஆம் ஆண்டிற்கான மாநிலத்தலைவர் தேர்வு

M. சையத் அபுதாஹீர் M.Sc., M.Phil.,

10.12.2012 அன்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக தலைவர் ஜனாப் ஷப்பீர் அஹ்மத் தலைமையில் 2013-14ஆம் ஆண்டிற்கான SIO மாநில தலைவர் தேர்வு நடைபெற்றது.  அதில் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சகோதரர் சையத் அபுதாஹீர் அவர்களை மாநிலத் தலைவராக தேர்வு செய்துள்ளனர். சையத் அபுதாஹீர் திருச்சியை சேர்ந்தவர், M.Sc., M.Phil., பட்டங்கள் பெற்றவர். தற்போதைய மாநில செயலாளராக பணியாற்றி வருகிறார். மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகோதரர் சையத் அபுதாஹீர் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு தொடர்ந்து இறைவழியில் உறுதியாக நிலைத்து நிற்கின்ற ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் அதிகமதிகம் வழங்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கின்றோம்.

 மாநிலச் செயலாளர்

கோவையை சார்ந்த சகோதரர் சிக்கந்தர் பாஷா அவர்கள் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.