புத்தக வனம் – நடமாடும் புத்தக நிலைய பயணத்தின் துவக்கவிழா

Puthaga vanam

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) சார்பில் நடமாடும் புத்தக நிலையம் (Mobile Book Shop) புத்தக வனம் துவக்க விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் அருகில் உள்ள இக்‌ஷா புத்தக நிலையத்தில் 20.12.2012 அன்று மாலை நடைபெற்றது.

ஜனாப் அஹமத் கபீர் அவர்களின் கிராஅத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. ஐ.எஃப்.டி-யின் பொதுச்செயலாளர் அப்துர் ரகீப் அவர்கள் வரவேற்புரையாற்றினார். ஐ.எஃப்.டி-யின் வளர்ச்சியில் இது ஒரு மைல்கல்லாக இருக்கின்றது என்றார்.

ஐ.எஃப்.டி-யின் தலைவர் ஷப்பீர் அஹமத் அவர்கள் துவக்கவுரையாற்றினார்.

இந்நிகழ்வில் யுனிட்டி பப்ளிக் ஸ்கூலின் தலைவர் அஹமத் மீரான், ஜெம் துனைத்தலைவர் ஹெச்.எம். சுல்தான் மொஹைதீன், தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா, தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சமூகத்தின் செயலாளர் முஹம்மத் அஃப்சல், எல்.கே.எஸ் சையத் அஹமத், இம்தியாஸ் மற்றும் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐ.எஃப்.டி-யின் பொருளாளர் இம்ரான் லத்தீஃப் சேட் நன்றியுரையாற்றினார். வி.எஸ்.அமீன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

புத்தகவனத்தை ஹெச்.எம். சுல்தான் மொஹைதீன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை  தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முஹம்மத் ஹனிஃபா அவர்கள் துவக்கி வைத்தார்.