மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சி முகாம்

பேச்சாளர் பயிற்சி முகாம்

பேச்சாளர் பயிற்சி முகாம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழகமண்டலம் சார்பில் மாநில அளவிலான பேச்சாளர் பயிற்சி முகாம் டிசம்பர் 29,30 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற்றது.

திருக்குர்ஆன் விரிவுரையுடன் முகாம் ஆரம்பமானது. மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் கே.ஜலாலுதீன் அவர்கள் திருக்குர்ஆன் விரிவுரையாற்றினார். அதன் பிறகு முகாமின் அமைப்பாளரும் மனித வள மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ஐ.கரீமுல்லாஹ் அவர்கள் துவக்கவுரையாற்றினார். இந்த முகாம் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை விவரித்தார்.

சொற்பொழிவுக் கலை; வழிகாட்டும் குறிப்புகள் என்ற தலைப்பில் முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் வழிகாட்டுதல் வழங்கினார். சொற்பொழிவுகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான குறிப்புகளையும் வழங்கினார்.

அவரது உரையை தொடர்ந்து பங்கேற்பாளர்களில் 6 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பொது  தலைப்புகளில் உரையாற்றினார். உரை முடிந்தவுடனேயே அதற்கான வல்லுநர் விமர்சனத்தை முனைவர் அப்துல்லாஹ் வழங்கினார். ஒவ்வொருவரின் உரைக்கும் சிறப்பான ஆலோசனைகள் வழங்கினார்.

மதிய அமர்வில் சொற்பொழிவுகளின் முக்கியத்துவம், தாக்கம் & தீனை நிலைநாட்டுதல்! என்ற தலைப்பில் அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் அவர்கள் பவர்பாயிண்ட் மூலம் உரையாற்றினார்.

உரையை தொடர்ந்து வரலாற்றில் முத்திரை பதித்த சொற்பொழிவுகளின் காட்சிகள் திரையிடப்பட்டது அதன் பிறகு இறுதியாக எஸ்.என்.சிக்கந்தர் சில வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பங்கேற்பாளர்கள்

பங்கேற்பாளர்கள்

இரண்டாம் நாள் காலை திருக்குர்ஆன் விரிவுரைக்கான பயிற்சியுடன் ஆரம்பமானது. பங்கேற்பாளர்களில் 4 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திருக்குர்ஆன் விரிவுரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பான முறையில் அனைவரும் விரிவுரையாற்றினார். அதன் பிறகு வல்லுநர் வழிகாட்டுதல்களை மெளலவி மொஹைதீன் குட்டி உமரி அவர்கள் வழங்கினார். திருக்குர்ஆன் விரிவுரையில் கவனிக்கப்பட வேண்டிய விவரங்களை பட்டியலிட்டார்.

speaktraicamp3

அதன் பிறகு முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. பங்கேற்பாளர்களில் 6 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைப்புகளின் அடிப்படையில் உரையாற்றினர். ஒவ்வொருவரின் உரைக்கு பிறகு வழிகாட்டுதல்களை டாக்டர் மொஹைதீன் மற்றும் கே.ஜலாலுதீன் ஆகியோர் வழங்கினர்.

இறுதி அமர்வு ஆதாரங்களின் ஒளியிலும், கருத்தார்ந்த முறையிலும் உரைகளை தயாரித்தல் என்ற தலைப்பில் மெளலவி நூஹ் மஹ்ளரி அவர்களின் உரையுடன் ஆரம்பமானது. சிறப்பான உரைக்க்கு படி,படி,படி….. படித்தல் அவசியம் என்பதை முதல் குறிப்பாக வழங்கி பின் பல்வேறு குறிப்புகளை வழங்கினார். பங்கேற்பாளர்களுக்கு இவ்வுரை பயனுள்ளதாக அமைந்திருந்தது.

உரைக்கு பிறகு தாக்கங்கள் நிகழ்வில் 5 நபர்களது முகாம் குறித்த கருத்துகளை பதிவு செய்தனர்.

இறுதியாக ஐ.கரீமுல்லாஹ் அவர்களின் நிறைவுரையுடன் முகாம் நிறைவுற்றது.