IFT-யின் 6 புதிய புத்தகங்கள் வெளியீடு

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை IFT சார்பில் 14.01.2013 அன்று மாலை 36வது சென்னை புத்தகக்காட்சி புன்னகை அரங்கில் 6 புதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

மெளலவி முஸம்மில் அவர்களின் திருமறை வசனம் ஓத புத்தக வெளியீட்டு நிகழ்வு துவங்கியது. IFT இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் வரவேற்புரை வழங்கினார். IFT பொதுச்செயலாளர் ஹெச்.அப்துர் ரகீப் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

6 புதிய புத்தகங்களின் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.

புதிய புத்தகங்களின் விவரம் 

சின்ன சின்ன மின்னல்கள் – சிராஜுல் ஹசன்

இதயம் திருந்த இனிய மருந்து – சிராஜுல் ஹசன்

இஸ்லாமும் இங்கிதமும் – மெளலவி நூஹ் மஹ்ளரி

அன்புள்ள – சிராஜுல் ஹசன்

மணம் வீசும் மணிச்சொற்கள் – அஷ்ஷேக் காலித் முஹம்மத் மின்ஹாஜ்

ஃபிக்ஹுஸ் ஸுன்னாஹ் – அஷ்ஷெக் ஸைய்யத் சாபிக் (தமிழில் மெள.நூஹ் மஹ்ளரி)

அவரை தொடர்ந்து ஜனாப் சையத் அப்துல் காதிர் (சீனா தானா) அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பிறகு சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் அஹமத் மரைக்காயர், மெளலவி கான் பாகவி, பக்தவட்சலம் கல்லூரி பேராசிரியை முனைவர் சுதேசி, தூர்தர்சன் இயக்குனர் திரு. மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.