HIV பாதிப்பு பற்றிய பல்சமய கலந்துரையாடல்

aids aware1

02.03.2013 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, ஹச். ஐ. வி ஆல் பாதிக்கபட்டவர்களுக்கு தீர்வு காண, CSI கலந்துரையாடல் மையத்தில், பல் சமய கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் கோவையிலிருந்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் , SIO, GIO, மற்றும் வெல்பேர் பார்ட்டி சார்பாக ஆண்களும் பெண்களும் மாணவ மாணவியர்களும்  கலந்து கொண்டனர். மற்ற சமயத்தினரும் கலந்து கொண்டனர்.

CSI அமைப்பிலிருந்து விஜி வர்கீஸ் ஏபென் வரவேற்புரை வழங்கினார். ESHA அமைப்பின்  செயலாளர் பிலிப் குருவில்லா நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினார். அதை தொடர்ந்து கீழக்கரை அரபிக் கல்லூரியின் முதல்வரும் மருத்துவருமான சையத் மசூத் ஆலிம் ஜமாலி நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசினார். “நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைத்த போது வறியவர்களும் இளைஞர்களும் மட்டுமே இணைந்தனர். மக்காவில் வாழமுடியாத நிலை ஏற்பட்ட போது முஸ்லிம்கள் அண்டை நாடான அபிஸீனியாவில், ஒரு கிறிஸ்த்துவ மன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள் ” என்பதை குறிப்பிட்டு காட்டினார். அவரை தொடர்ந்து ஃபாதர் குருவில்லா நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். HIV ஆல் பாதிக்க பட்டவர்களை பாவிகளாகவே பார்க்காமல் அவர்களுக்கு சமயங்கள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார். பின்னர், AIDS நோயால் பாதிக்கபட்ட பெண்கள் இருவர் தாங்கள் கடந்து வந்த பாதையையும், ஏற்பட்ட அவமானத்தையும், உறவுகள் துண்டித்து விட்டதும் சமுதாயம் விரட்டி விட்டதயும் கூறினார்கள்.

நிகழ்வில் கலந்து கொண்டோர்

நிகழ்வில் கலந்து கொண்டோர்

புத்த மத குரு, மெளரியா மேதாபால், ஃபாதர் பால் பிரகாசம், சகோதரர் பைசுர் ரஹ்மான்  ஆகியோர் தங்கள் சமய கருத்துகளை கூறினார்கள். இதில் சகோதரர் பைசுர் ரஹ்மான் சூரா மாவூன் அடிப்படையில் அழகிய விளக்கம் அளித்தார். பின்னர் சமயங்கள் குழுக்களாக பிரிந்து, கலந்துரையாடினர். கோவை நண்பர்கள் HIV நோயாளிகளின் நிலைமையை அமைதியான, உருக்கமான சிறு நாடகம் மூலம் நடித்துக் காட்டினார்கள். சென்னை நண்பர்கள் கவிதைகள் வாசித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். பங்கு கொண்ட முஸ்லிம்கள் குர்ஆனும் , நபி வழியும் யென்ன தீர்வை சொல்லுகிறது யென்று எழுதி கொடுத்தார்கள். தீபக் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்திலிருந்து ஆதில் சேட், யூசுஃப் பாஷா, ஐ.ஜலாலுதீன், அப்துல் ஹக்கீம், அப்பாஸ் கலந்து கொண்டனர். வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவிலிருந்து ஜரினா ஜமால், எஸ்.ஐ.ஓவிலிருந்து சிராஜுல் ஹசனும், ஜி.ஐ.ஓவிலிருந்து ஆபிதாவும் கலந்து கொண்டனர்.