GIO மீதான குற்றசாட்டுக்கு மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்!

gio

ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அமைப்பின் (GIO) மீது தீவிரவாத முத்திரை :

மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்!

ஜமாத்தே இஸ்லாமியின் “Girls Islamic Organisation”(GIO), புர்கா அணிய வலியுறுத்துதல், குரான் போதனைகளை பின்பற்றுதல், இஸ்லாத்தின்படி வாழ தூண்டுதல் உள்ளிட்ட “ஜிஹாதிய” பிரச்சாரங்களில் ஈடுபடுவதாகவும், அவர்களை “கழுகுக்கண்” கொண்டு கண்காணிக்க வேண்டும் என, மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வு போலீஸ், மாநிலத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை, 2 தினங்களுக்குமுன் அனுப்பி, முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ நடவடிக்கைகளில் மீண்டும் களம் இறங்கியுள்ளது.

மேற்படி போலீசின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டி நேற்றைய (01/04) “சாம்னா” பத்திரிகை, விஷம் கக்கும் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மும்பை பதிப்பிலும் உளவுத்துறையின் இந்த சுற்றறிக்கை குறித்த செய்தி வெளியானது.

GIO மாணவிகள் அமைப்பு, பெண்களை புர்கா அணியுமாறு பிரச்சாரம் செய்வதாகவும், பெண்கள் கூடும் பகுதிகளில் குரான் போதனைகளை பிரச்சாரம் செய்வதாகவும், இஸ்லாத்தை பற்றி பிறருக்கு எத்தி வைப்பதாகவும் கூறும் அந்த போலீஸ் சுற்றறிக்கை, இது ஆபத்தை விளைவிக்கும் எனவும் கூறுகிறது

இந்த விஷம சுற்றறிக்கையை எதிர்த்து, ஜமாத்தே இஸ்லாமி இயக்கத்தினர் பல கட்ட போராட்டங்களை அறிவித்தனர்.

அதை தொடர்ந்து, மகாராஷ்டிர சிறப்பு புலனாய்வுத்துறையின் “அடிஷனல் போலீஸ் கமிஷனர்” நவல் பஜாஜ், ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்களான தவுபீக் அஸ்லம் கான், அஸ்லம் காசி, ஹாபிஸ் பாரூக்கி உள்ளிட்ட தலைவர்களை, நேற்று (01/04) மாலை நேரில் சந்தித்து, புலனாய்வுத்துறையின் தவறான சுற்றரிக்கைக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த சுற்றறிக்கை தயாரித்தவர்கள் -அனுப்பி வைத்தவர்கள் உள்ளிட்டவர்கள் மீது “துறை ரீதியான” நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்குப்பின், செய்தியாளர்களை சந்தித்த தவுபீக் அஸ்லம், அடிஷனல் கமிஷனரின் “வாய்வழி மன்னிப்பு கோரலும்” இனி அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளும் உத்தரவாதத்தாலும், தாங்கள் திருப்தியடையவில்லை,என்றார்.

போலீசின் மீது “மான நஷ்ட வழக்கு” உள்ளிட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாக கூறிய அஸ்லம், போலீசிடமிருந்து எழுத்து பூர்வமான மன்னிப்புக்கடிதம் வரும் பட்சத்தில், தங்களின் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலக்கப்படும் என்றார்.

“கையில் துப்பாக்கியுடன்” புர்கா அணிந்த பெண்ணின் படம் போட்டு, விஷம செய்தி வெளியிட்ட சாம்னா பத்திரிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் மகாராஷ்டிர நிர்வாகிகள்.

1 comment for “GIO மீதான குற்றசாட்டுக்கு மன்னிப்பு கோரியது மகாராஷ்டிர போலீஸ்!

  1. April 2, 2013 at 3:35 pm

    அல்ஹம்துலில்லாஹ்… அல்லாஹ் இத்தகைய தீய எண்ணம் கொண்ட கூட்டத்திடமிருந்து எங்களை காப்பாற்றுவானாக! முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றினைப்பானாக! மேலும் எங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக! ஆமீன்.

Comments are closed.