GIO-வின் கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள்

GIO நிகழ்வில் கலந்து கொண்டோர்

GIO நிகழ்வில் கலந்து கொண்டோர்

மாணவிகளுக்கான கோடைக்கால இஸ்லாமிய வகுப்புகள் கோவை மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) சார்பில் ஹிதாயா பெண்கள் அரபிக்கல்லூரியில் நடைபெற்றது. இவ்வகுப்புகளில் சிறப்புரைகள், நபிமார்கள் வரலாறு, நபித்தோழர்கள் வரலாறு, நபித்தோழியர் வரலாறு, துஆ மனனம், இன்னும் பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றது.

மாணவிகளின் ஆரோக்கியத்தை பேணிகாக்க பல்வேறு ஆரோக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டது. பத்து நாட்கள் நடைபெற்ற வகுப்புகளுக்கு பிறகு தேர்வு நடைபெற்றது.

இறுதி நாள் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜ.இ.ஹி-ன் பெண்கள் வட்ட கோவை செயலாளர் ஜஹீனா மற்றும் ரஜீனா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இவ்விழாவில் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

கோவையை போன்று சென்னை, நாச்சியார்கோயில், திருச்சி என பல்வேறு பகுதிகளில் GIO சார்பில் மாணவிகளுக்கான கோடைக்கால வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றது.