மாங்கனி நகரில் மங்கையர் முகாம்

sic
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளை மகளிரணியின் சார்பாக கோடைக்கால இஸ்லாமியப் பயிற்சி வகுப்புகள் ராயக்கோட்டை ரோடு ஈடன் கார்டன் ஆங்கிலப் பள்ளி, கொத்தூர் உருது பள்ளி, கோட்டை பெண்கள் உருது பள்ளி ஆகிய இடங்களில் ஏப்ரல் 29 முதல் மே 24 வரை நடைபெற்றன. 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்காக நடத்தப்பட்ட இவ்வகுப்பில் 275 பேர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமில் மகப்பேறு மருத்துவர் சுஜாதா அன்பழகன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு ஏற்படுகின்ற உடல் பிரச்னைகளையும் அதற்கான மருத்துவக் குறிப்புகளையும் வழங்கியது மிகப் பயனுள்ளதாக இருந்தது. வாணியம்பாடி வஹீதா, சபீனா ஆகியோர் வீட்டை நிர்வகிக்கும் முறை, வீட்டைச் சுவனமாக்குவதில் பெண்களின் பங்கு குறித்து சிறப்பாக விளக்கினர்.
கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் பெண்கள் சந்திக்கின்ற பிரச்னைகள், மேற்கத்தியப் பண்பாடு, ஹிஜாப், ஈமான், தூய்மை, இஸ்லாமியக் கடமைகள், நற்பண்புகள், இறைத்தூதர்களின் வரலாறு, நபித்தோழர்களின் தியாகங்கள் என பல்வேறு தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்பட்டன.