IFT சார்பில் பத்திரிகையாளர்களுக்கான ஈத் பெருநாள் சந்திப்பு

EID IFT1

இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (IFT) சார்பில் பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், தொலைக்காட்சி அன்பர்கள் என பல்வேறு சிறப்பு விருந்தினர்களை ஒருங்கிணைத்து பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி IFT வளாகத்தில் நடைபெற்றது. இறைவசனத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது,  IFTயின் இணைச்செயலாளர் கே.ஜலாலுதீன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினர்களில் திரு.வீரையன், ஃபெரேரா, பத்திரிகையாளர் சங்க தலைவர் சுபாஷ், லேனா தமிழ்வாணன் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் என பல்வேறு நபர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

EID IFT1

இறுதியாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மத் நோன்பு பெருநாள் செய்தியை சிறப்பான முறையில் தன்னுடைய சிறப்புரையில் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி இரவு விருந்துடன் இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.