IFT கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாநிலத்தலைவர் கல்வி உதவித்தொகை வழங்குகிறார்

மாநிலத்தலைவர் கல்வி உதவித்தொகை வழங்குகிறார்

 

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழக மண்டலம் சார்பில் 2013-14 ஆம் கல்வி ஆண்டிற்கான IFT கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் சென்னை, ஈரோடு, கோவை மற்றும் திருச்சியில் நடைபெற்றது.

இணையதளம் மற்றும் பத்திரிகை வாயிலாக கல்வி உதவித்தொகை அறிவிப்பு செய்து பெறப்பட்ட மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து ஆகஸ்ட் மாதம் திருச்சி, சென்னை, கோவை ஆகிய நகரங்களில் நேர்முக தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு தகுதி வாய்ந்த மாணவர்கள் தேர்வு செய்யபட்டனர்.

கடந்த அக்டோபர் 8, 11,13,18, 19 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, ஈரோடு, திருச்சி, மேட்டுபாளையம் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் கல்வி உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். மாணவர்களிடம் கல்வி உதவித்தொகையின் நோக்கங்களை விவரித்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அல்ஹமதுலில்லாஹ் இவ்வாண்டு பல்வேறு பாடப்பிரிவுகளில் 65 மாணவ-மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு

சென்னை

சென்னை

கோவை

கோவை

திருச்சி

திருச்சி