ஒருபால் உறவு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்!

20tv_supreme_court_1213810f

பத்திரிகைச் செய்தி

ஒருபால் உறவு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு மதிக்க வேண்டும்!
– ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் வலியுறுத்தல்

ஒருபால் உறவு சட்ட விரோதமானது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு – புதுச்சேரி மாநிலத் தலைவர் ஏ.ஷப்பீர் அஹ்மத் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

11.12.2013 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ஒருபால் உறவு இந்தியக் குற்றவியல் சட்டம் 377 பிரிவின்படி தண்டனைக்குரிய குற்றமே எனத் தெளிவாக அறிவித்தது. இதனை வரிந்து கட்டிக்கொண்டு மத்திய அரசு எதிர்த்தது. இதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்திருந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய மத்திய அரசின் இந்நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து, சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்திருப்பது ஒழுக்க மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் கைகளுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இந்தியா போன்ற ஓர் ஆன்மிக நாட்டில் விரும்பத்தகாத மேற்கத்திய வாழ்க்கை முறையினைத் திணிக்கவும், நமது பண்பாட்டுக் கூறுகளைச் சிதைக்கவும் மத்திய அரசு அசாதாரண ஆர்வம் காட்டியது வியப்பையும் கவலையையும் தருகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கும் நமது நாட்டின் தொன்மை வாய்ந்த பாரம்பர்யத்துக்கும் மத்திய அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும். மனிதகுலத்தின் நன்மையைக் கருத்தில் கொண்டு இத்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு வேறு எந்த மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது. ஒருபால் உறவுக்கு ஆதரவாக சட்டத் திருத்தங்களைச் செய்யவும் கூடாது. வேறு ஏதேனும் சட்டங்களை இயற்றும் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.