IFT வழங்கும் மனிதகுல சேவைக்கான எம்.ஏ.ஜமீல் அஹ்மத் விருது 2013

சிலம்பொலி செல்லப்பனாரின் சிறப்புரை

சிலம்பொலி செல்லப்பனாரின் சிறப்புரை

மனித குலத்தின் வெற்றிக்காக, மனித குலத்தின் ஈடேற்றத்திற்காகத் தேவைப்படுகின்ற தூய நற்கருத்துகளைத் தமிழுலகிற்குத் தரவேண்டும் எனும் உன்னத குறிக்கோளுடன் 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை Islamic Foundation Trust – IFT உருவாக்கப்பட்டது.

கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழுக்கும் தமிழ்ச் சமுதாயத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் சமுதாய நல்லிணக்கத்திற்கும் இஸ்லாமிய அறக்கட்டளை நிறுவனம் பல அரும்பணிகளை ஆற்றியுள்ளது.

அறக்கட்டளையின் தலையாயப் பணிகளுள் முதன்மையானது திருக்குர்ஆனைத் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிட்டதுதான். குர்ஆனின் மொழிபெயர்ப்பு மட்டுமின்றி பல்வேறு தலைப்புகளில் 280க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது.

இஸ்லாத்தை நவீன காலத்தின் வாழ்வியல் நெறியாகச் சமர்ப்பித்தல், மனிதர்களிடையே நல்ல தொடர்புகளை உருவாக்குதல், சமூகங்களிடையே நல்லிணக்கத்தை மலரச் செய்தல் ஆகியவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது.

மனிதகுல சேவைகளுக்காக பல்வேறு தளங்களில் சிறந்த முறையில் சேவையாற்றுபவர்களுக்கு இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்டின் நிறுவனர்களில் ஒருவரான பன்முக ஆற்றல் கொண்ட மனிதநேய மாண்பாளர், மறைந்த அறிஞர் M.A. ஜமீல் அஹ்மத் அவர்களின் பெயரால் ஆண்டுதோறும் விருது அளிப்பது என்று IFT முடிவு செய்தள்ளது.

அதனடிப்படையில் 2013 ஆம் ஆண்டிற்கான M.A. ஜமீல் அஹ்மத் விருது இரண்டு நபர்களுக்கு வழங்கப்பட்டது. மனித உரிமை சேவைகளுக்காக மனித உரிமைகளுக்கான மக்கள் கழகத்தின்-(PUHR) மாநிலத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களுக்கும், கல்வி சேவைக்காக யூனிட்டி குழும பள்ளிகளின் தலைவர் திரு. எஸ். அஹ்மத் மீரான் அவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.  இவ்விருவருக்கும் 2013 ஆம் ஆண்டிற்கான M.A. ஜமீல் அஹ்மத் விருது வழங்குவதில் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை பெரிதும் மகிழ்ச்சியடைகின்றது.

MAJA Award2

இறைவனின் இவ்விழா பிப்ரவரி 1, 2014 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நிறுவனத்தின் தலைவர் ஏ.ஷப்பீர் அஹ்மத் தலைமையேற்க பொதுச்செயலாளர் ஹெச். அப்துர் ரகீப் முன்னிலை வகித்தார். நிறுவனத்தின் அறங்காவலர் டி.அஜீஸ் லுத்ஃபுல்லாஹ் விருது அறிமுகம் செய்து வைத்தார்.

MAJA Award Silampoli

தமிழற்ஞர் சிலம்பொலி செல்லப்பனார் விருதுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். தமுமுக-வின் மூத்த தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் எஸ்.என்.சிக்கந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் சிறப்புரையாற்றினார்.

MAJA Award1 MAJA Award2 S.Ahmed Meeran

விழாவின் நிறைவாக விருது பெற்றோரின் ஏற்புரை நடைபெற்றது. நிறுவனத்தின் பொருளாளர் இம்ரான் சேட் அவர்களின் நிறைவுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது. விழாவினை இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் இணைச் செயலாளர் கே. ஜலாலுதீன் தொகுத்து வழங்கினார்.