ஹிஜாப் கண்காட்சி

hijabexpo

ஜமஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாநிலம் தழுவிய அளவில் மாபெரும் “ஹிஜாப்” விழிப்புணர்வு பிரச்சார வாரம் (நவம்பர் 8 முதல் 16, 2014 வரை) நடத்தி வருகின்றது.

இப்பிரச்சாரத்தில்
* மடக்கோலை மூலம்
* கருத்தரங்கம்
* பத்திரிக்கையாளர் சந்திப்பு
* அரங்கக் கூட்டம்
* குழு சந்திப்பு
என்று பல பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை மாநகர மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) சார்பாக கடந்த ஞாயிறு, நவம்பர் 9, 2014, காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை மாணவியருக்கான “ஹிஜாப்” குறித்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

hijabexpo2

இந்நிகழ்ச்சியினை கோவை மாநாகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மகளிர் பிரிவினரும் மாணவியர் இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்த “ஹிஜாப்” குறித்த பல்வேறு விளக்கங்களும் அதன் தேவையினையும் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் காண்பவர்களைக் கவரும் வண்ணமும் சிந்திக்கவும் வைத்தது.

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே…!!!