அஞ்சிக்கொள்ளுங்கள் அந்நாளை – கோவையில் ஒரு நாள் இஜ்திமா

jih kovai kvs

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரக் கிளை சார்பாக “அஞ்சிக்கொள்ளுங்கள் அந்நாளை” என்ற இறை வசனத்தை மையமாகக்கொண்ட ஒரு நாள் இஸ்லாமிய இஜ்திமா கடந்த பிப்ரவரி 8, 2015 (ஞாயிறு) காலை 11 மணிமுதல் மாலை 8.30 மணிவரை நடைபெற்றது.

நிகழ்ச்சியினை இறைவசனங்கள் ஓதி துவக்கி வைத்தார் தாருல் உலூம் மதரசாவின் மாணவர் சகோதரர் அஸ்கர் அலி. அவர் ஓதிய வசனங்களின் மொழிபெயர்ப்பை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர் சகோதரர் சர்ஜுன் வாசித்தார்.

அடுத்து, நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்றும் இந்நிகழ்ச்சியின் அமர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தினார் இந்நிகழ்ச்சியின் அமைப்பாளர், ஜனாப். அப்துல் ஜலீல் அவர்கள்.

அடுத்து, இந்நிகழ்ச்சி நடத்தப்படுவதற்கான நோக்கம் குறித்தும் கோவை மாநகரக் கிளை மேற்கொள்ளும் பல்வேறு பணிகள் குறித்தும் விளக்கும் விதமாக தலைமையுரையாற்றினார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரத் தலைவர், ஜனாப். K A. சையது இப்ராஹிம் அவர்கள்.

நிகழ்ச்சியின் முதலாவது அமர்வின் முதல் நிகழ்வாக “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்” என்ற தலைப்பில் ஓர் ஆழிய உரையை நிகழ்த்தினார் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள். ஓர் மனிதனின் இறையச்சத்தையும் இறைநம்பிக்கையையும் பிரிக்க முதியாத ஒன்று என்பதனையும் இவை எப்படி ஓர் மனிதனை இறைவனின் பால் நெருங்கச் செய்கிறது என்பதனை தெளிவாக விளக்கினார்.

 அடுத்த நிகழ்வாக, “இஸ்லாத்தில் சமூக சேவை” என்ற தலைப்பில் இஸ்லாம் கூறும் சமூக சேவையின் இன்றியமையாத தேவையையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மேற்கொள்ளும் சமூக சேவைகள் குறித்தும் விளக்கினார் சமரசம் இதழின் பொறுப்பாசிரியர், ஜனாப். A R. சையது சுல்தான் அவர்கள்.

 அடுத்த நிகழ்வாக, “இன்றைய சூழலும் நம்முடைய அழைப்பும்” என்ற தலைப்பில் தற்கால இந்திய சமூகத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இஸ்லாமிய அழைப்பு முறை குறித்தும் அதற்காக நம் சமூகத்தை சீர்படுத்த வேண்டிய அவசியத்தையும் விளக்கினார் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவர், டாக்டர். KVS. ஹபீப் முஹம்மது அவர்கள்.

இதனையடுத்து, ளுஹர் தொழுகை மற்றும் உணவு இடைவேளை விடப்பட்டு அடுத்த அமர்வு துவங்கியது.

இரண்டாம் அமர்வின் முதல் நிகழ்வாக இந்நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்களின் இஸ்லாம் மற்றும் இயக்கம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் பதில் கூறினர்.

அடுத்த நிகழ்வாக, “முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்” என்ற தலைப்பில் தற்கால இந்திய அரசியல் சூழல் குறித்தும் இஸ்லாமிய சமூகம் மற்றும் இயக்கங்கள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தினையும் பல்வேறு புள்ளிவிவரங்களைக் கொண்டு தெளிவுபடுத்தினார் கோவை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர், மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள்.

IMG_3200-1

இதனையடுத்து, அசர் தொழுகை மற்றும் தேநீர் இடைவேளை விடப்பட்டது.

இதனையடுத்து, கோவை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) தென்றல் கலைக்குழுவினர் “நான் ரொம்ப பிஸி” என்ற தலைப்பில் நடத்திய நாடகம் எல்லோரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மூன்றாம் அமர்வின் முதல் நிகழ்வாக, “தீனை மேலோங்கச்செய்தல்” என்ற தலைப்பில் ஓர் சிறந்த உரையை நிகழ்த்தினார் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத்தலைவர், டாக்டர். KVS. ஹபீப் முஹம்மது அவர்கள்.

இதனையடுத்து, “விசாரணை நேரம்” என்ற தலைப்பில் மறுமை குறித்தும் அதற்க்கு மனிதன் இவ்வுலகில் மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகளும் செயல்களும் குறித்த ஓர் சிந்தையைத் தூண்டும் உரை நிகழ்த்தினார் இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் மொழிபெயர்ப்பாளர், மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ளரி அவர்கள்.

நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஜனாப். அப்துல் ஜலீல் அவர்களின் நன்றியுரையுடன் இந்த ஒரு நாள் இஜ்திமா இனிதே முடிந்தது. இந்நிகழ்வில் கோவை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியைச் சார்ந்த சகோதர சகோதரிகள் திரளாக பங்குகொண்டனர்.

 எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே…!!!