கோவையில் பல்சமயக் கருத்தரங்கம்

பல்சமய கருத்தரங்கம்

பல்சமய கருத்தரங்கம்

தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் டிசம்பர் 21, 2014 முதல் ஜனவரி 15, 2015 வரை மாநிலம் முழுவதும் “மறுமையை நோக்கி” என்ற பரப்புரை நிகழ்ச்சி நடத்தி வருகிறது.

அதன் ஓர் நிகழ்வாக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக பல்சமயக் கருத்தரங்கம் இன்று, ஜனவரி 11, 2015 (ஞாயிறு) மாலை 6:30 மணிமுதல் கோவை, RS புரம் புரந்தரதாசர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பல்வேறு சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் “மறுஉலக வாழ்க்கை – வேதங்களின் பார்வையில்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக இறைவசனங்களை ஓதி துவக்கிவைத்தார் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) கோவை மாநகரத் தலைவர் சகோதரர் முஹம்மது நிசார் அவர்கள்.

அடுத்து, நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில ஆலோசனை குழு உறுப்பினர், PS. உமர் ஃபாரூக் அவர்கள்.

அடுத்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரத் தலைவர், KA சையது இப்ராஹிம் அவர்கள் தலைமையுரையாற்றினார்.

அதனையடுத்து, கோவை இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸின் துணைத்தலைவர், திரு. சுப்பிரமணியம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

அதனையடுத்து, சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் (கௌமார மடாலயம்), கோவை தென்னிந்தியத் திருச்சபை இம்மானுவேல் சர்ச் சார்பாக அருட்தந்தை கருணாகரன், கோவை ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர் மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி, குருத்வாரா சிங் சாஹிபின் தலைவர் திரு. இக்பால் சிங், ஜெயின் சங்கத்தின் அரன்ன்காவலர் திரு. லால்சந்த் கத்ரெலா ஆகியோர் அவரவர் சார்ந்த சமயங்கள் சார்ந்த புனித நூற்களின் பார்வையில் மறுஉலக வாழ்வு மற்றும் அதனைச்சார்ந்து மனிதவாழ்வு குறித்து கருத்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில், பேரூர் ஆதீனம் இளையபட்டம் தவத்திரு மருதாச்சல அடிகளார், கோவை குட் ஷெப்பர்ட் பாடசாலையின் தலைவர், டாக்டர் மெல்கியோர், ரூட்ஸ் தொழிற்க்குழுமங்களின் தலைவர் திரு. ராமசாமி, RAAC அமைப்பின் செயலாளர், திரு. ரவீந்திரன், மற்றும் இண்டெக்ரேடட் யோகா மையத்தின் தலைவர் லலிதானந்த சுவாமிகள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

நிகழ்வினை சிறப்பாக தொகுத்தளித்தார் சகோதரர் சலீம் அவர்கள்.

இந்நிகழ்வில் பங்குகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தன் நன்றியுரையின் மூலம் வழங்கினார் இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் உறுப்பினர் சகோதரர் அஹ்மத் ஷரீப் அவர்கள்.

நிகழ்ச்சியினைத் தொடர்ந்து இதில் பங்குகொண்ட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவை நகரின் பல்வேறு சான்றோர்கள், அறிஞர்கள், தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

எல்லாப்புகழும் இறைவைன் ஒருவனுக்கே.!!