திருப்பூரில் உளத்தூய்மை நிகழ்ச்சி

மெள.சித்திக் மதனி உரையாற்றுகிறார்

மெள.சித்திக் மதனி உரையாற்றுகிறார்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் கிளையின் சார்பாக 21-12-2014 ஞாயிறு காலை 10 முதல் மாலை 6 மணிவரை “மறுமை பிரச்சார வாரம்”த்தை முன்னிட்டு ஒரு நாள் சிறப்பு தர்பியத் (பண்பு பயிற்சி)முகாம் மஸ்ஜிதுல் ஹுதா மேல் தளத்தில் நடைபெற்றது.

இம் முகாமிற்க்கு சிறப்பு பேச்சாளராக மௌலவி சித்தீக் மதனி அவர்கள் கலந்து கொண்டார்கள்.  KM முஹம்மது தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக குர்ஆன் விரிவுரை ஜனாப் வதூத் அவர்கள் நிகழ்த்தினார்.

அடுத்து மௌலவி சித்தீக் மதனி அவர்கள் காலை அமர்வில் “இதயத் தூய்மை”என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில் இதயத்தூய்மை இல்லாமல் நாம் எந்த பணிகளை செய்தாலும் அது இறைவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறி, அதற்க்கு பல்வேறு வரலாற்று உதாரணங்களையும்,குர்ஆனின் வசனங்களை எடுத்துரைத்தும்,உள்ளங்களை ஈர்க்கும் அற்புத சம்பவங்கள் மூலம் எடுத்துரைத்தார்.

இதுவரை நாம் செய்திரிக்கும் பணிகளில் இதயத்தூய்மைக்கு பதிலாக உலகம் என்னை பார்க்க வேண்டும்,என்னை புகழவேண்டும் என்ற வகையில் இருந்திரிந்தால் என்ன ஆகுமோ என்று ஒவ்வொரு ஊழியர்களையும் ஒரு கனம் சிந்தித்து பார்க்க வைத்து விட்டார் மௌலவி அவர்கள்.

மதிய அமர்வில்
“மறுமை வெற்றிக்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்”
என்ற மையக்கருத்தில் 8 பேர் கொண்ட குழு கலந்துரையாடல் நடத்தியது.

* குடும்ப சீர்திருத்தம்
* பொருளாதார நெறிகள்
* வழிபாடுகள்
* இயக்கமும் இறைபணியும்

என்ற நான்கு பொருள்களில் 8 பேர் கொண்டு குழு தஙகள் கருத்துகளை
அற்புதமாக எடுத்துரைத்தார்கள்.

பிறகு மௌலவி சித்தீக் மதனி அவர்கள் “இஸ்லாமிய இயக்கத்தின் தனித்தன்மைகள்”என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிறகு SIO வில் இருந்து இந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்கள் இஸ்லாமிய இயக்கத்தில் இனையும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை சகோதரர் நஜிர்ஹுசைன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.