ஜ.இ.ஹி-ன் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எஞ்சினியர் முஹம்மத் சலீம் சாகிப் நியமனம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக எஞ்சினியர் முஹம்மத் சலீம் சாகிப் பொறுப்பேற்றுள்ளார். கடந்த இரண்டு நாள்களாக தில்லியில் நடந்த மத்திய ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் எஞ்சினியர் முஹம்மத் சலீம் அவர்களை பொதுச் செயலாளராக நியமித்துள்ளார்.

கேரள மாநிலத் தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றிய டி ஆரிஃப் அலீ, மௌலானா நுஸ்ரத் அலீ ஆகியோர் அகில இந்தியத் துணைத் தலைவர்களாய்ப் பொறுப்பேற்றுள்ளனர்.

அழைப்புச் செயலாளாராக முஹம்மத் இக்பால் முல்லா அவர்களும் இஸ்லாமிய சமூகத் துறைச் செயலாளராக மௌலானா ரஃபீக் காசிமி அவர்களும் சமுதாயப் பிரச்னைகள் துறைச் செயலாளராக மௌலானா முஹம்மத் அஹ்மத் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சினீயர் முஹம்மத் சலீம் – அகில இந்தியப் பொதுச் செயலாளர்

Engr Saleem Secretary General - JIH

Engr Saleem
Secretary General – JIH

எஞ்சினீயர் முஹம்மத் சலீம் சாகிப் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பை ஜெய்பூரிலும் கான்பூர் ஐஐடியில் எம்டெக்கும் படித்தவர்.

மாணவப் பருவத்திலிருந்தே இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்.  இராஜஸ்தான் மாநில எஸ்ஐஓ தலைவராகச் செயலாற்றியிருக்கின்றார்.

1987-இல் ஜமாஅத் உறுப்பினரானார். இராஜஸ்தான் மாநில ஜஇஹி தலைவராக, அகில இந்திய மக்கள் தொடர்புத் துறைச் செயலாளராகப் பணியாற்றி இருக்கின்றார். கடந்த பல மீக்காத்களாக மத்திய ஆலோசனைக் குழு, மத்திய பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.

ஆரிஃப் அலீ – அகில இந்தியத் துணைத் தலைவர்

Arif Ali Vice President - JIH

Arif Ali
Vice President – JIH

நல்ல சிந்தனையாளர். ஆரிஃப் அலீ அவர்களும் எஸ்ஐஓ கேரள மாநிலத் தலைவராகவும் ஜஇஹி கேரள மாநிலத்தலைவராகயும் செயலாற்றியவர்.  மத்திய பிரதிநிதிகள் சபை உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.

மௌலானா நுஸ்ரத் அலீ – அகில இந்தியத் துணைத் தலைவர்

Mov. Nusrat Ali Vice President - JIH

Mov. Nusrat Ali
Vice President – JIH

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் அகில இந்திய பொது செயலாளராக (2007 – 15) எட்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார்.  கித்தூர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர்.  M.A., B.Ed., பட்டம் பெற்றவர். 1980லிருந்து ஜமாஅத்துடன் தொடர்புடையவர்.  மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.  நிர்வாக திறனுடையவர்.

சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி – அகில இந்தியத் துணைத் தலைவர்

Syed Sadathullah Hussaini Vice President - JIH

Syed Sadathullah Hussaini
Vice President – JIH

சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி எஸ்.ஐ.ஓ அகில இந்தியத் தலைவராகச் செயலாற்றியவர். கடந்த பல மீக்காத்களாக மத்திய ஆலோசனைக் குழு, மத்திய பிரதிநிதிகள் சபை ஆகியவற்றின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார்.