ஹஜ் வழிகாட்டுதல் முகாம்-2015..!!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக் கிளை சார்பாக வருடம்தோறும் இந்திய ஹஜ் வாரியம் மூலம் புனித மக்கா மற்றும் மதீனாவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகள் சிறந்த முறையில் தங்களது ஹஜ் கடமைகளை அதன் உயிரோட்டத்துடன் நிறைவேற்றிட உதவும் வகையில்

“ஹஜ் வழிகாட்டுதல்” முகாம் சிறப்பாக நடத்தி வருகிறது.

இந்த வருடமும் கோவை மாவட்டம் மற்றும் அதனை சுற்றுப்புறங்களிலிருந்து இந்திய ஹஜ் வாரியம் மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹாஜிகளுக்கு “ஹஜ் வழிகாட்டுதல்” முகாம் ஆகஸ்ட் 4, 2015, செவ்வாய்க்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

11060462_10207483345230176_276888959546839746_n

நிகழ்வின் துவக்கமாக இறைவனது வேதத்தின் சில வரிகளின் விரிவுரையைக்கொண்டு துவக்கி வைத்தார் கோவை மஸ்ஜிதுல் ஹுதாவின் இமாம், ஜனாப். T.A. அப்துல் கஃபூர் அவர்கள்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரச் செயலாளர், ஜனாப். M. ஷஹீர் அவர்கள் ஹாஜிகளை வரவேற்றதுடன் நிகழ்வினைக் குறித்த துவக்கவுரையினையும் நிகழ்த்தினார்.

11822696_10207483558595510_7994107696989310559_n

“ஹஜ்ஜின் உயிரோட்டம்” என்ற தலைப்பில் உரையாற்றும் மௌலவி, A. ஃபக்கீர் முஹம்மது பாகவி அவர்கள்..

அதனைத்தொடர்ந்து, “ஹஜ்ஜின் உயிரோட்டம்” என்ற தலைப்பில் பாலக்காடு சிட்டி மஸ்ஜித்தின் இமாம், மௌலவி, A. ஃபக்கீர் முஹம்மது பாகவி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து, ஹஜ்ஜில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள் மற்றும் அதன் விளக்கங்களின் முதல் பகுதி திரையிடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, மதிய தொழுகை மற்றும் உணவு இடைவேளை விடப்பட்டது.

11700977_10207483922444606_1491104626543157503_o

Power Point மூலம் ஹஜ்ஜின் கடமைகளை விளக்கும் மௌலவி. M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள்..

நிகழ்வின் இரண்டாம் அமர்வில், ஹஜ்ஜில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகள் மற்றும் அதன் விளக்கங்களின் இரண்டாம் பகுதி திரையிடப்பட்டது அதனைக்குறித்த விளக்கங்களை வழங்கினார் மஸ்ஜிதுல் இஹ்ஷானின் இமாம் மற்றும் ஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரியின் தாளாளர், மௌலவி. M. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி அவர்கள். அதனையடுத்து, ஹாஜிகளின் பல்வேறு கேள்விகளுக்கு சிறப்பான விளக்கங்களும் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் கோவை மாநகரத் தலைவர், ஜனாப். KA. சையது இப்ராஹிம் அவர்கள் நிறைவுரையாற்றினார்.

இந்நிகழ்வினை சிறப்பாக வழிநடத்தியும் இறுதியில் நன்றியுரையும் வழங்கினார், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின்
அல்-அமீன் காலனி வட்டப் பொறுப்பாளர், ஜனாப். ஜாஹிர் ஹுசைன் அவர்கள்.

இந்த நிகழ்ச்சியில் 200 ஹாஜிகள் பங்குகொண்து பயனடைந்தனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள், இந்நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், இந்நிகழ்வில் PowerPoint மூலம் ஹஜ்ஜினைக் குறித்து திரையிடப்பட்ட விளக்கங்கள் சிறப்பாகவும் தங்களது பல சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதாகவும் அமைந்தது எனவும், மேலும்,
இதுபோன்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் வருடம்தோறும் நடத்தப்படவேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சி இறைவனின் விருந்தினர்களுக்கு சிறப்பான ஓர் வழிகாட்தியாக அமைந்தது.

எல்லாப்புகழும் இறைவன் ஒருவனுக்கே..!!