விழிப்புணர்வு மாரத்தான் – மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்

“மது மற்றும் போதைப் பழக்கத்தை ஒழிப்போம்” என்கிற மையக்கருத்தில் “விழிப்புணர்வு மாரத்தான்” –
இறையருளால் இன்று(01-11-2015) காலை 7 மணிக்கு, கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்றது.

நான்கு மற்றும் ஏழு கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் பெண்கள், பதினெட்டு வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என மூன்று பிரிவுகளில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை, கோவையின் பல்வேறு தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புகளுடன் இணைந்து இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நடத்தியது.

இந்நிகழ்வில் சுமார் நான்காயிரம் நபர்கள் கலந்து கொண்டனர்.

விரிவான அறிக்கை விரைவில் பதிவேற்றப்படும் இன்ஷா அல்லாஹ்..!!