சென்னை கடலூர் வெள்ள நிவாரண பணியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மற்றும் எஸ்.ஐ.ஓ

1. rescue ift lane 1s

சென்னை மற்றும் கடலூரில் பெய்த தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் தவித்துக்கொண்டிருகிறார்கள்.  தங்க இடம், உணவு, உடை என்ற எந்தவித தேவைகளையும் பிறரை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த இயற்க்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை எளிய மக்களே. அவர்களுக்கு நிவாரணம் வழங்கிட தமிழக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமை தனது சமூகசேவை பிரிவினரை மீட்ப்புப்பணியில் முடுக்கிவிட்டுள்ளது.  மழை ஓய்ந்து வெள்ளம் வடிந்துகொண்டிருக்கும் இந்நேரத்தில் பெரும்பாலான மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்விற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஜமாஅத்தின் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

தீவிர மழையின் பாதிப்பு ஏற்பட்ட உடனே ஜமாஅத்,  எஸ்.ஐ.ஓ ஊழியர்கள் கடலூர் மற்றும் சென்னையின் முக்கிய பகுதிகளில் பல்வேறு பணிகளை செய்துள்ளனர்.

மழை பாதிப்பு ஏற்பட்ட உடனே ஒருசில பகுதிகளில் குறிப்பாக ஆதம்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை ஜமாஅத் மற்றும் எஸ்.ஐ.ஓ தொண்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.  ஜமாலியா, மேட்டுபாளையம் பகுதியிலும் வெளிவர முடியாமல் சிக்கி தவித்த முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பாற்றினர்.  தாசாமக்கான் பள்ளிவாசலில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டனர்.

தொடர்ந்து 4 நாட்களுக்கு கடலூர், பரங்கிபேட்டை, புதுசத்திரம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, சைதாபேட்டை, தாசாமக்கான், கன்னிகாபுரம், புளியாந்தோப்பு, என்னூர், அத்திப்பட்டு, சிந்தாதரிபேட்டை, பட்டாபிராம், பேரம்பாக்கம், அமைந்தகரை, ஆவடி இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு பால், பிரட், காலை-மதிய உணவு, மெழுகுவர்த்தி, போன்றவற்றை வழங்கினர். இப்பணிகளின் மூலம் பாதிக்கப்பட்ட 10,000க்கும் அதிகமான மக்கள் பயனடைந்தனர்.   

சென்னை சைதாப்பேட்டை, கோட்டூர்புரத்தை தேர்ந்தெடுத்து மக்களுக்கு நோய் பரவமால் இருக்க வேண்டும் என்பதால் அப்பகுதியை சுத்தம் செய்தனர்.

6.12.2015 அன்று எஸ்.ஐ.ஓ மற்றும் ஜமாஅத் தன்னார்வ தொண்டர்கள் சைதாபேட்டை திடீர் நகர் பகுதியிலுள்ள சாக்கடையை சுத்தம் செய்து தேங்கியிருந்த நீரை சுத்தம் செய்தனர். அப்பகுதியிலிருந்த இரண்டு தெரு, இரண்டு பள்ளிவாசல் மற்றும் ஒரு கோயிலையும் சுத்தம் செய்தனர்.

7.12.2015 அன்று கோட்டூர்புரம் பகுதியில் தேங்கியிருந்த நீரை அகற்றி அப்பகுதியில் இருந்த பள்ளிவாசல் மற்றும் கோயிலை சுத்தம் செய்தனர்.

இப்பணிகள்யாவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஒத்துழைப்போடு ஜமாஅத் மற்றும் ஜமாஅத்தின் மாணவர் அமைப்பு எஸ்.ஐ.ஓ-வின் தொண்டர்கள் இயன்ற அளவு செய்துவருகிறார்கள்.

தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மக்கள் சேவைத்துறை பணிகளை தீவிரப்படுத்தி பல்வேறு ஆக்கப்பூர்வமான மறுசீரமைப்பு பணிகளுக்கு திட்டமிட்டுள்ளது.

இதனைத் தொய்வில்லாமல் செய்து முடிக்க மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரின் பொருளாதார உதவியும் தேவைப்படுகிறது. தங்களால் முடிந்த அளவு உதவிகளை கீழ்காணும் வங்கிக்கணக்கில் வழங்கிடவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

Relief Fund JIH TN

Account No: 0912201012204

IFSC Code: CNRB0000912

Canara Bank, Perambur Branch, Chennai