மது ஒழிப்பு பிரச்சார வாரம் – சென்னை நிகழ்வுகள்

மது ஒழிப்பு பிரச்சார வாரத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. 23.12.2010 – பொதுக்கூட்டம் (சைதாப்பேட்டை-மாலை 6 மணி) 24.12.2010 – தெருமுனைப் பிரச்சாரம் (முக்ப்பேர், அம்பத்தூர், பாடி, ஆவடி, பட்டாபிராம்)

பேச்சாளர் பயிற்சி முகாம்

மது ஒழிப்பு பிரச்சார வாரத்தை முன்னிட்டு 19.12.2010 அன்று சென்னையில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.  இந்நிகழ்ச்சியில் பாடம் பத்திரிகையின் ஆசிரியர் திரு. அ. நாராயணன், சிக்கந்தர் மற்றும் ஜான் முஹம்மத் ஆகியோர் பயிற்சியளித்தனர்.  தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பேச்சாளர்கள் கலந்துக்கொண்டனர்.

SIO-விலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கான முகாம்

19.12.2010 அன்று SIO-விலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கான முகாம் நடைப்பெற்றது. மாநில தலைமையகத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சென்னை, திருச்சி, கோவை ஆகிய மாவட்டத்திலிருந்து SIO-விலிருந்து ஓய்வு பெற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  மாநிலத் தலைவர், துணைத்தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர்கள் ஆகியோர் ஓய்வு பெற்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர்.

மது ஒழிப்பு பிரச்சார வாரம்

தமிழக அளவில் மது ஒழிப்பு பிரச்சார வாரம் “டிசம்பர் 24,2010 முதல் ஜனவரி 2,2011 வரை நடைபெற இருக்கிறது. பல்வேறு நிகழ்ச்சிகள் இவ்வாரத்தில் நடைபெற உள்ளது.