ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – மங்கலம் கிளை
அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை சிறப்பு நிகழ்ச்சி
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மங்கலம் கிளை சார்பாக, நாடு தழுவிய அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரையை முன்னிட்டு மஸ்ஜிதுல் இக்லாஸ் பள்ளிவாசலில் சிறப்பு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மஸ்ஜிதுல் இக்லாஸ் பள்ளிவாசல் இமாம் மௌலானா ஹாபிஸ் நிஜார்தீன் அவர்கள் கிராத் ஓதி துவக்கவுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து JIH மங்கலம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் வதூத் சாஹிப் அவர்கள் தலைமை வகித்தார்.
திருப்பூர் மாவட்டம் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் முன்னாள் மஹாமே அமீர் ஜனாப் K.P. ஹசன் சாகிப் அவர்கள் அண்டை வீட்டார் உரிமைகள் குறித்து சிறப்புரை நிகழ்த்தி, சமூக நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியை JIH மங்கலம் கிளை செயலாளர் ஜனாப் அப்துல் ரஷீத் சாஹிப் அவர்கள் தொகுத்து, நன்றியுரையுடன் நிறைவு செய்தார்.
ஆண்கள், பெண்கள், மாணவ–மாணவிகள் என மொத்தம் 60 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இறுதியில் “நினைவில் நின்ற அண்டை வீட்டார்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பெண்கள் தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.
Tea, Snacks மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைந்தது.
JIH உறுப்பினர்கள், ஊழியர்கள், GIO, SIO, மஹல்லாவாசிகள் அனைவரும் ஒருங்கிணைந்த பங்களிப்பு செய்தனர். அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் இம்மையிலும் மறுமையிலும் சிறந்த நன்மை வழங்குவானாக!