News Channel

சாதனை மாணவர் முஹம்மது அனஸை ஜமாஅத் நிர்வாகிகள் சந்திப்பு

சாதனை மாணவர் முஹம்மது அனஸை ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து..‌

டிசம்பர் 1(2025) திங்கட்கிழமை,
தமிழ் நாடு அரசின் உயர் கல்வித்துறைக்கான நான் முதல்வன் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் பயிற்சி பெற்று உயரிய நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதற்க்காக பல்வேறு கட்டங்களில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதன்படி  இந்த கல்வியாண்டில்   7 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெற்று தேர்வு எழுதினர். அவர்களில் 21 மாணவர்கள் தேர்வாகினர். அவர்களில் திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சியில் வசிக்கும் அப்துல் ரசீது, தாஹிரா பானு தம்பதியினரின் மகன் சிக்கன்னா அரசு கல்லூரியில் கல்வி பயிலும் முகம்மது அனஸ் தேர்வாகியுள்ளார். 

அவரை ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் கோவை மண்டலத்தின் சார்பில்  மண்டல அமைப்பாளர் ஜனாப்: S.A.K.ஜெய்லானி அவர்கள் தலைமையில் தெற்கு மண்டல அமைப்பாளர் ஜனாப்: K.நஜீர் ஹுஸைன் , மங்கலம் கிளை தலைவர் ஜனாப்: அப்துல் வதூத், மங்கலம் ஊழியர் வட்ட பொறுப்பாளர் ஜனாப்: கலீமுல்லாஹ் , ஊழியர்கள் முஜிபுர் ரஹ்மான், முகமது ரபி உள்ளிட்டவர்கள் முஹம்மது அனஸை சந்தித்து பரிசுகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்‌.