பத்திரிக்கை அறிக்கை
உள்-சமூக உரையாடல்களிலிருந்து சமூகங்களுக்கு இடையிலான உரையாடலுக்கு முன்னேற வேண்டும்: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
புது தில்லி, 02 டிசம்பர் 2025
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் 2025 நவம்பர் 29,30 இரண்டு நாள் Qasas‘ 2.0 media mastery boot camp நிகழ்ச்சி புது தில்லியில் நிறைவுற்றது.
இதன் இறுதி அமர்வில் அவைத் தலைவரும் ஜமாஅத் தேசியத் தலைவருமான சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி அவர்கள் எழுச்சி மிகு உரையாற்றினார்.
ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் தங்கள் பார்வையையும் ஈடுபாட்டையும் விரிவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர்,
“ஊடக வல்லுநர்கள் உள்-சமூக உரையாடல்களைக் கடந்து, முஸ்லிம்களை பரந்த சமூகத்துடன் இணைக்கும் சமூகங்களுக்கு இடையிலான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இளைய தலைமுறையினரை வளர்த்தெடுப்பதும் வழிகாட்டுவதும் அவசியம் என்று சுட்டிக்காட்டிய அவர், “இளைஞர்கள் இயல்பாகவே தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்தவர்களாகவும்,
Gen z இளைஞர்கள் இன்றைய விசயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களை டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகத் தளங்களுக்கான பணிக்குத் தயார்படுத்த வேண்டும்” என்றார்.
மேலும், பத்திரிகையாளர்கள், நிருபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரைத் தொடர்ந்து சந்தித்து தொழில்முறை உறவுகளை உருவாக்கி, பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் மத்திய ஊடகத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்த இரண்டு நாள் Qasas 2.0’ பயிற்சி முகாமில் பத்திரிகையாளர்கள், அறிஞர்கள், மாணவர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் ஜமாஅத் மாநில அமைப்புகளின் ஊடகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறப்புரைகள், ஊடகப் பயிலரங்குகள், முன்னணி ஊடக நிறுவனங்களுக்கான பயணங்கள், பொது கருத்து, ஜனநாயகத்திற்கான அச்சுறுத்தல்கள், ஊடகம்-சமூக உறவுகள் குறித்த குழு விவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றன.
மூத்த பத்திரிகையாளர்களான ரஷீத் கிட்வாய், ஜியா உஸ் ஸலாம், ஆதித்ய மேனன் உள்ளிட்டோர் திறன் வாய்ந்த ஊடகத் தொடர்பு, ஊடகமும் சமூக அமைப்புகளும் இடையிலான இடைவெளியைக் குறைத்தல், செய்தித் துறையின் இயக்கவியல் ஆகிய தலைப்புகளில் சிறப்பு அமர்வுகளை நடத்தினர்.
ஊடக உத்தி, நிறுவன வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு உதவியுடனான உள்ளடக்க உருவாக்கம், சமூக ஊடக ஈடுபாடு உள்ளிட்ட பல அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. திறந்த அமர்வு மற்றும் குழு விவாதங்களுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
வெளியிட்டவர்:
சல்மான் அஹ்மத்
தேசிய உதவித் தலைவர்,
ஊடகத் துறை
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைமையகம்
புது தில்லி