News Channel

சிறப்பு நிகழ்ச்சி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  சென்னை மெட்ரோ சார்பாக 03.12.2025 அன்று அண்டை வீட்டார் உரிமைகள் கடமைகள் நாடு தழுவிய   பரப்புரை  முன்மாதிரி அண்டை வீட்டார்! முன்மாதிரி சமூகம்!  பரப்புரையின்  சார்பாக youtube சேனல் நடத்தும் பொறுப்பாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஜமாஅத் தே இஸ்லாமி ஹிந்த்  சென்னை மெட்ரோ தலைவர் அதாவுல்லா தலைமையில் டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்களின் சிறப்புரையுடன் முகப்பேர் பொறுப்பாளர் ஷாஹுல் அவர்களின் நிகழ்ச்சி தொகுப்புடன் சிறப்பாக  நிகழ்ச்சி நடந்தது.  புருட்டுஸ் - மைனர், சத்தியா, பேரலை - மில்டன், இந்திரகுமார், அரன்செய் மகிழன் பஸ்ட் லைன் - உமாபதி, ஜீவ டுடே - ஜீவசகாப்தம் மேற்பட்டவர்களுக்கு பரப்புரையின் நோக்கத்தை விளக்கி மடக்கோளை சமரசம், அழகிய அண்டைவீடு நூல் அன்பளிப்பாக கொடுத்து,அவர்களின்  கேள்விகளுக்கு டாக்டர் அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள். பரப்புரையின் நோக்கமும் அதன் வீரியமும் மிகவும் ஆழமானது இந்த பரப்புரை ஒரு வடிவம் கொடுத்து களத்தில் இறங்கி செய்யவேண்டிய அவசியமான ஒரு நிகழ்வு. இதன் மூலம் இஸ்லாம் மீது உள்ள தவறான புரிதல்களை கலைய அருமையான சந்தர்ப்பம் என்றார்கள். மிக ஆர்வமாக அவர் பரப்புரையின் நோக்கத்தை அறிந்து கொண்டார்கள்  இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம் நடக்க வேண்டும். என்று ஆர்வமுடன் கூறினார்கள். இந்த சந்திப்பின்போது ஜமாஅத்தே இஸ்லாமி சென்னை மெட்ரோவின் செயலாளர் அஷ்ரப் அலி அவர்களும் மீடியா பொறுப்பாளர் சகோதரர் அஜ்மல் அவர்களும் உடன் இருந்தனர்..